1.பொருள்வளத்துக்கு ஏற்றார்போலவும்,நற்பண்புகளுடனும் அமையும் மனைவி
கணவனின் பெருந்துணையாகும்.
2.பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிற்ந்ததாயிருந்தாலும் பயனில்லை.
3.நற்பண்புள்ள மனைவி அமைந்தால் வாழ்க்கையில் எல்லாமே கிடைத்தாற்போல் ஆகும்.
4.பெண்ணுக்கு கற்பைத் தவிர பெருமைத்தருவது எதுவும் இல்லை.
5.சிறந்த மனைவி பெய் என்று சொன்னால்...மழையும் அது கேட்டு பெய்யுமாம்.
6.சிறந்த மனைவி கணவனையும் காத்து,உறுதி குலையாது புகழுடன் திகழ்வாள்.
7.பண்புள்ள மனைவியை அடிமை என எண்ணுவது அறிவுடமை ஆகாது.
8.நல்ல கணவனை அடைந்த பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
9.இல்வாழ்க்கை சரியாக அமையாதவர்கள் சமூகத்தில் நிமிர்ந்து நடக்கமுடியாது.
10.நல்ல குழந்தைகளுடனும்,பண்புகளுடனும் வாழ்வதே இல்வாழ்க்கையின் சிறப்பு.
3 comments:
மற்றவை பற்றி தெரியவில்லை. குறள் 5-க்கு பொருள் இதுவென கேள்விப்பட்டிருக்கிறேன் :
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் = பெய்யெனப் பெய்யும் மழை.
அப்படிப்பட்ட பெண் பெய்யென்று சொன்னவுடன் பெய்யும் மழைக்கு இணையானவாள், இதமானவள் என்று பொருளாமே !
நீங்கள் கேள்விபட்டது இருக்கட்டும்..படிக்கும் போது உங்கள் தமிழ் ஆசிரியர் எப்படி
சொல்லிக் கொடுத்தார்.இப்படித்தானா?
மனிவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமல்லவா?
Post a Comment