Monday, October 21, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 88

தனிப்படர் மிகுதி  இது அதிகாரம்.

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாடஹ் பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.

காதலர்கள் ஒருவரை ஒருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.....என்கிறது இக்குறள்..

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி (1192)

வாழ்வார்,வீழ்வார்,வீழ்வார், அளிக்கும் அளி.

அடுத்து ஒரு குறளையும் பார்ப்போம்..

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின் (1194)

விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.

விழப்படுவார், வீழ்வார்,வீழப்படாஅர்.... 

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 87

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர்  போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்க காதல் நோயும் பெருகுமாம்.

காதல் நோயை மறைக்கவும் முடியாதாம்..அதற்குக் காரணமான காதலரிடமும் நாண்த்தால் உரைக்கவும் முடியாதாம்.

படர்மெலிந் திரங்கல் அதிகாரத்தில் இப்படிக் கூறுபவர் மேலும் சொல்கிறார்...

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா  (1169)

இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவது போல தோன்றும் கொடுமை இருக்கின்றதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.

கொடியார்,கொடுமை,கொடிய,நெடிய...

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 86

ஒருவர் தகாத நடத்தையின் காரணமாக நாணுவத்ற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேற்பாடு உண்டு...

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற (1011)

நாணுதல்,நாணுத்திருநுதல்,நாணுப்பிற ....

அடுத்து

வெட்கப்படவேண்டிய அளவிற்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து (1018)

பிறர் நாணத் தக்கது, அறநாணத்தக்கது, தானாணானாயின்..

வள்லவரும் சொல் விளையாட்டும் - 85

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு (963)

உயர்ந்தநிலை வரும்போது அடக்க உணர்வும்,அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்

பெருக்கத்து, சுருக்கத்து, வேண்டும், வேண்டும்....  அடடா....

அடுத்து...

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை (964)

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவர்,

தலையின், நிலையின் ,இழிந்த,இழிந்த..

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர் (962)

புகழ்மிகக் வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டு மென்பத்ற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்

சீரினும்,சீரல்ல, சீரொடு....

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 84

நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ர அடக்க  உணர்வும்  கால்கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.

பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்..

என்றெல்லாம் குடிமை எம்னும் அதிகாரத்தில் சொல்கிறார்.
தவிர்த்து ஒரு குறளில்...

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தவாய்ச் சொல் (959)

விளைந்த பயிரைப் பார்த்தாலே அது எந்த நிலத்தில் விளைந்தது என அறிந்து கொள்ளலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நிலத்திற், குலத்திற், காட்டும், காட்டும்!!!!!

அடுத்து ஒரு குறள்...

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு (960)

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவையாகும்.

நலம் வேண்டின்,குலம் வேண்டின், வேண்டுக.... 

Sunday, October 20, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 83

மருந்து ,இது  அதிகாரம்..

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு  வேறு மருந்தே தேவையில்லையாம்..

தவிர்த்து உடலுக்கு ஒத்துவரும் உணவுக் கூட  அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை என்கிறார்.

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு (945)

மாறுபாடில்லாத,ஊறுபாடில்லாத..

நோய் என்ன? அதற்கான காரணம் என்ன?நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

இதையே...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

நோய்நாடி, நோய் முதல் நாடி, வாய்நாடி...!!!!!


வள்ளுவரின் சொல் இளையாட்டு - 82

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொது மகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல் (912)

ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு போகமொழி பேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது

பயன் தூக்கி,நயன் தூக்கி, பண்பு,பண்பின்

அடுத்து....

புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்கள்

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள் (916)

தந்நலம்,புன்னலம்,பாரிப்பார்,பாரிப்பார்

மேற்கண்ட குறள்கள் வரும் அதிகாரம் வரைவின் மகளிர்.

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 81

பெரியாரைப் பிழியாமை...

ஒரு செயலை செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காதலாம அமையும்..

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை (891)

ஆற்றுவார், ஆற்றல், போற்றுவார்,போற்றல்

அடுத்து

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும் (892)

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.

பெரியாரை, பெரியாராற், பேரா..

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 80

உட்பகை அதிகாரத்தில் மேலும் இரு குறள்கள்..

உட்பகை அஞ்சித்தற் காக்க உறைவிடத்து
மட்பகையின் மானத் தெறும் (883)

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை மண்பாண்டத்தை அறுக்கும் கருவி போல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.

உட்பகை, மட்பகை..

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது (886)

ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால்,அத்னால் ஏற்படும் அழிவினைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.

ஒன்றாமை,ஒன்றி,ஒன்றல்

வள்ளுவரின் சொல் விளையாட்டு -79

நெருங்கிய உறவினரிடம் தோன்றும் உட்பகையானது அவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பல துபங்களை உண்டாக்கும் என்கிறார் உட்பகை அதிகாரத்தில்.

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின் (881)

இனிமையாய்த் தெரியும் நிழலும்..நீரும் கூடக்கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையுமாகும்.

இன்னாத,இன்னா,இன்னாவாம், இன்னா...

அடுத்து

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு (882)

என்கிறார்.

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வாள்போல்,கேள்போல்,அஞ்சற்க, அஞ்சுக, பகவரை, பகைவர்

  

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 78

பகைத்திறம் தெரிதல்..

பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை (872)

சொல்லாற்றல் மிக்கவர்களை சொல்லேர் உழவ்ர் என்கிறார்.
வில்லேர் உழவர், படைக்கலன்களைக் கொண்ட வீரர்கள்..

படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம்.ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெரு மக்களுடன் பகை கொள்ளக் கூடாது 

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 77

மனமாறுபாடு காரணமாக ஏற்படும் பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.

மனமாறுபாடு எனும் நோயை யார் தனக்ள் மனத்தைவிட்டு அகற்றிவிடுகிறார்களோ, அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.

இகல் எனும் அதிகாரத்தில் வரும் இரு குறட்பாக்களில் இப்படிச் சொல்லுபவர் சொல்கிறார்..

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின் (854)

துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான்.அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால் அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.


இன்பத்துள் இன்பம், துன்பத்துள் துன்பம்..இது வள்ளுவனின் விளையாட்டு.



வள்ளுவரின் சொல் விளையாட்டு - 76

ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும் என்கிறார் புல்லறிவாண்மையில்.

எதிரிகளால் கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.

அறிவின்மை,இன்மையுள்,இன்மை,பிறிதின்மை,இன்மை என கீழே சொல்லியுள்ளக் குறளில் சொய்ல் விளையாட்டினைப் பாருங்கள்.

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு (836)

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.  

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 75

பழைமை இது அதிகாரம்.

பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

வருந்தக் குடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்..

எல்லைக்கண், தொல்லைக்கண் என் அஒரு குறளில் விளையாடுகிறார்.

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு (806)

நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால் கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது  நட்பைத் துறக்க மாட்டார்கள். 

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 74

பெரும் செல்வமாகஇருப்பினும் அது அருள் நெறியிலோ, அன்பு வழியிலோ வராத போது அதனை புறக்கணித்துவிடவேண்டும்,

என பொருள் செயல்வகை அதிகாரத்தில் கூறுபவர் மேலும் சொல்கிறார்..

அறம், பொருள்,இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.

உறுபொருள்,உல்குபொருள்,தெறுபொருள் என ஒரு குறளில் விளையாடுகிறார்.அந்த குறள்..

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் (756)

வரியும், சுங்கமும்,வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 73

ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும்.அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்...

என்றெல்லாம் சிற்றினம் சேராமையில் சொன்னவர் சொல்கிறார்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும் (455)

ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் ,செயலும் தூய்மையானவையாக இருக்கும்

மனந்தூய்மை,செய்வினைதூய்மை,இனந்தூய்மை..வள்ளுவரின் சொல் விளையாட்டு. 

வள்ளுவரும் சொல் விளையாட்டு - 72

முன் கூட்டியே எச்சரிக்கையாய் இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போலக் கருகிவிடும்....என குற்றங்கடிதல் அதிகாரத்தில் ஒரு குறளில் சொன்னவர் அடுத்து சொல்கிறார்...

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்? என்கிறார் இக்குறளில்..

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு (436)

தன் குற்றம்,பிறர் குற்றம், என் குற்றம்


Saturday, October 19, 2019

வள்ளுவரும் சொல்வெளையாட்டும் - 71

எண்ணும், எழுத்துமாகிய அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்..என கல்வி அதிகாரத்தில் சொல்லுபவர் மேலும் சொல்கிறார்..

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க  அதற்குத் தக (391)

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவிற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.கற்றபிறகு அதன்படி நடக்க வேண்டும்

கற்க,நிற்க, கற்பவை, கற்றபின்

அடுத்த குறள்...

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிக்கு (392)

எண்ணென்ப,எழுத்தென்ப, கண்ணெண்ப

எண்ணும், எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

வள்ளுவரும் சொல் விளையாட்டும் -70

நன்மையும் ,தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும் போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

எனக் கேட்கும் வள்ளுவர்...

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியினை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது அரிதேயாகும் என்கிறார் இக்குறளில்..

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377)

வகுத்தான்,தொகுத்தார், வகுத்த, வகை

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 69

களவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்..

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதே கூடத் தவறிப் போகும்.களவினை , பார்க்காதவர்க்கோ புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

கள்வார்க்குத் தள்ளும் உயர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு (290)

கள்வார்,கள்ளார்,தள்ளும்,தள்ளாது

கள்ளாமை அதிகாரத்தில் வருகின்றன இக்குறள்கள்.

மற்றொரு குறள்...

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்.கொள்ளையடிப்போர் நெஞசமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

அளவறிந்தார் நெஞ்சத் தரம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு (288)

அளவறிந்தார்,களவறிந்தார்,நெஞ்சம்,நெஞ்சம்

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 68

கண்ட இடத்தில் ஒன்றும் காணாத இடத்தில் ஒன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்றாம்..

மேலும்....

நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்.ஆனால், பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்ரிக் குறை கூறுவது தவறாகும்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்(184)

கண்ணிண்று, கண்ணற, சொல்லினும்,சொல்லற்க,சொல்,முன், பின்..  

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 67

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கினைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கினை அறவே மறந்துவிடுவது சிறந்த பண்பாகும்.

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை (153)

இன்மை,இன்மை, வன்மை,வன்மை

வறுமையிலும் கொடிய வறுமை ,வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது.அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.


வள்ளுவரின் சொல் விளையாட்டு - 66

விருந்தோம்பல் அதிகாரத்தில்.. விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவேக் கருதலாம் என்கிறார் பொய்யாமொழியார்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (90)

அனிச்சம் எனப்படும் பூ முகர்ந்த உடன் வாடிவிடக் கூடியது.அதுபோல சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்....என்றவர்...மேலும் சொல்கிறார்...

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு (86)

வந்த விருந்தினரை உபசரித்து அவர்கள் வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

செல்விருந்து, வருவிருந்து,நல்விருந்து....ஆஹா...


வள்ளுவரின் சொல் விளையாட்டு - 65

வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் சொல்கிறார்..

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது .

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் (52)

அடுத்து ...

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை (53)

இல்லது,இல்லவள், இல்லவள்....

இதன் பொருள்...

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில்
எதுவுமே இருக்காது.  

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 64

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும்,அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது.இன்பமும் ஆகாது.

என்றவர் சொல்கிறார்...

வீழ்நாள் படாஅமை நன்றாற்ரின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் (38)

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுவோர்க்கு வாழ்க்கைப் பாதையை சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்..

வீழ் நாள்....வாழ்நாள்...

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயர்பால தோரும் பழி (40)

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தகக் அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவருக்குப் புகழ் சேர்க்கும்.

செயற்பால, உயர்பால...

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 63

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று (591)

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர்..ஊக்கமில்லாதவர்  வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டா.ர்.

உடையர்,உடையது.உடையர்

அடுத்து

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் (592)

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர வேறு எதனையும் நிலையான உடைமை என கூறஇயலாது.

உடைமை என மூன்று இடங்களில் சொல்கிறார். .  

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 62

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர் (602)

குலம் சிறக்க வேண்டுமானால் சோம்பலை ஒழித்து,ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

மடியை,மடியா, குடியை,குடியா

அடுத்து..

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து (603)

என்கிறார்.

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

மடிமடி, குடிமடி  ....அடடா...

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 61

சோம்பலை விட்டொழிக்க வேண்டும்..

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்

முயற்சி செய்யாமல் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்

மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும் (608)

பெருமை மிக்க குடியில் பிறந்தவராயினும்,அவரிடம் சோம்பல் குடியேறிவிட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கி விடும்

மடிமை,குடிமை,கடிமை

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 60

மேன்மேலும் உயர்ந்திட வேண்டும் என விரும்புபவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும் என்று சொல்லும் வள்ளுவர் சொல்கிறார்...

தெலிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக் கூட இழிவான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்..

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று (655)

'என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக் கூடாது.ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று

செய்யற்க, செய்வானேல்,செய்யாமை...வள்லுவரின் சொல் விளையாட்டு

Thursday, September 12, 2019

சில சிறப்புகள் - 59

வள்ளுவர் ,திருக்குறளில், த்மிழில் உள்ள எழுத்துக்களில் 37 எழுத்துகளை பயன்படுத்தவில்லை.குறளில் வராத உயிரெழுத்து "ஔ"

1705 முறை "னி" என்ற எழுத்து வந்துள்ளது

மொத்தம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் 14000 ஆகும்
மொத்த எழுத்துகள் 42194

120க்கும் மேற்பட்ட உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழின் முதல் எழுத்தான "அ" கரத்தில் தொடங்கி, கடைசி எழுத்தான "ன்" ல் முடியும் திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இல்லை.

குறளில் இடம் பெறாத ஒரே எண் 9 

ஒரே முறை வரும் எழுத்துகள்'ங" மற்றும் "ளீ"


தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ங்னம் ஆளும் அருள் (251)        

தனது உடலை வளர்ப்பதற்காக   வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படி கருணை உள்ளம் கொண்டவராக இருக்க முடியும்?                     




            


ளீ

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது (938)

பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி,அருள் நெக்ண்சத்தையும் மாற்றித துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது

சில சிறப்பு குறள்கள் - 58

துணை எழுத்தே வராத குறள்...

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (391)

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவிற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.கற்ற பிறகு அடஹ்ன்படி நடகக் வேண்டும்

2)நெடில் வராத குறள்

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு (786)

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளம் அல்ல..இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்

3)
கீழே சொல்லியுள்ள குறளில் பால்,தேன், நீர் மூன்றும் வருகிறது

பாலொடு தேங்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றுறிய நீர் (1121)

இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்

4)வெஃகாமை எனுன் அதிகாரத்தில் உ:ள்ள பத்து பாட்ல்களிலுமே வெஃகிற்,வெஃகிப்,வெஃகி,வெஃகுதல்,வெஃகி(அஃகி),வெஃகி,வெஃகி,அஃகாமை, வெஃகாமை,வெஃகா,வெஃகின் என 12 இடங்களில் ஆயுத எழுத்தினை பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர்


உதடுகள் ஒட்டா குறள்கள் - 57

கீழே குறிப்பிட்டுள்ள குறள்களைச் சொல்லும் போது நம் உதடுகள் ஒட்டாது..

1)
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (310)

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார்.சினத்தை அறவெ துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

2)

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (341)

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும் குறிப்பிட்ட அந்தப் பற்ரு காரணமாக வரும் துன்பம் அவனை அணுகுவதில்லை

3)
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல் (489)

கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும் போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்

4)
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து (1082)

அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது, தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது

5)
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு (1296)


காதல் பிரிவைத் தனியே இருந்து நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

Wednesday, September 11, 2019

வள்ளுவத்தில் கடவுள் - 56

வள்ளுவர் தன் குறள்களில் எந்த ஒன்றிலும் தமிழ் என்றோ கடவுள் என்றோ சொல்லவில்லை.

ஆகவேதான் திருக்குறள்.."உலகப் பொதுமறை" என போற்றப்படுகின்றது.

முதல் அதிகாரம் கடவுள்வாழ்த்து என்றாலும் அதில் வரும் ஆதி பகவன் இறைவனையேக் குறிப்பன ஆகும்

தவிர்த்து "கடவுள்" என்ற சொல்லைச் சொல்லவில்லையேத் தவிர கீழ்கண்ட குறள்களில் தெய்வம், இறைவன் என்ற சொற்களை சொல்லியுள்ளார்

1)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்

2)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)

தெய்வத்திற்கென எத்தனையோ அருங்குணங்கள் சொல்லப்படுகின்றன.உலகில் அறநெறியில் நின்று வாழ்கிறவன் தெய்வத்திற்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்

3)

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)

கணவன் வாக்கினைத் தெய்வத்தின வாக்கினைவிட மேலாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணயிட்டவுடன் மழை நடுங்கிப் பெய்யுமாம்

4)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (619)

தெய்வமே எண்ரு அழைத்து நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்பிற்கேற்ற வெற்றியினைத் தரும்

5)
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்
(702)

ஒருவன் மனத்தில் உள்ளதைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அத்திறமையை உடைய மனிதனையும் அத்தெய்வத்துடன் ஒப்பிடலாம்.

வள்ளுவத்தில் கோடிகள் - 55

குறளில் ஏழு குறள்களில் கோடி என்ற சொல் சொல்லப்பட்டுள்ளது.

அவை-

1) வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
    தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377)

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்காவிடின் கோடிப்பொருள் குவித்தாலும்,அதன் பயனை அனுபவிப்பது என்பதே அரிதாகும்

2)
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும் (639)

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதைவிட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்

3)
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும் (816)

அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்

4)

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி பெறும் (817)

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது

5)
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் (954)

பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்

6)
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லாக் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல் (1005)

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயனில்லை

7)

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும் (1061)

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்


Tuesday, September 10, 2019

வள்ளுவரும் விலங்குகளும் - 54

யானை-

1) காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு (500)

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூட கொன்றுவிடும்

(யானை- நரி)

2)
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு (597)

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பது போல, ஊக்கமுடையவர்கள் அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்

3)
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலுதாக் குறின் (599)

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளும் கொண்ட யானை த்ன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவதுதான்

(யானை-புலி)

4)
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று (678)

ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்

(5)

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தந்தொகைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை (758)

தன் கைப்பொருளைக் கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது  யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில்  சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது

6)
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772)

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி டஹ்ப்பினாலும் கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது

(யானை- முயல்)

7)

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் (774)

கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால்களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின் மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பதுக் கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்

8)

கடாஅக் களிற்ரின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் (1087)

மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்.அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல இருந்தது

9)
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியிந்தோல் போர்த்துமேய்ந்  தற்று(273)

மனதை அடக்க முடியாடஹ்வர்கள் துறவுக் கோலம் பூணுவது பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்

(பசு-புலி)

10)
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு  ளேறு(381)

ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள்,குறையாவளம்,குறையற்ற அமைச்சு,முரிபடாத நட்பு,மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே  ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.

11)
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து (486)

கொடுமைகளைக் கண்டும் கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல. அது, ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்கு தன்
கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்

12)
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற (495)

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்.தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்

13)

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டிடைத்து (624)

தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும்பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்


வள்ளுவரும் விலங்குகளும் - 53

வள்ளுவர் கீழ்கண்ட குறள்களில்"மான்" களைகுறிப்பிட்டுள்ளார்.

1)
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் (969)

உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள்.அதுபோல மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்

2)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து (1085)

உயிர் பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகின்றதே

3)
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து (1089)

பெண்மானைப் போன்ற இளமைத் துள்ளும் பார்வையையும்,நாணத்தையும் இயற்கையாகவே
 அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அனிகலன்கள் எதற்காக?

வள்ளுவரும் பறவைகளும் - 52

மயில், கோட்டான், காக்கை,கொக்கு ஆகியவையும் குறளில் காணபப்டுகின்றன.
1)
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் (475)

மயில் இறகாய் இருந்தாலும் கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவிற்கு அதற்குப் பலம் வந்து விடும்

2)அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு (1081)

எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ!இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சே!

3)
பகல் வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (481)

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும்.எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

4)
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள (527)

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும்.அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு

5)
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து (490)

காலம் கைகூடும்வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்

தவிர்த்து மீனும், பாம்பும், எலி, ஆமையும் கூட ஒவ்வொரு குறளில் வருகின்றன.

1)வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிர்பொன் விழுங்கி அற்று (931)

வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது.அந்த வெற்றி ,தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்

2)
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுரனுறைந் தற்று(890)

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்

3)ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும் (763)

எலிகள் கூடி கடல்போல முழங்கிப். பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழ்ந்துவிடுவார்கள்

4)
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று (1146)

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழ்ழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்ப்டும் "கிரகணம்" எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுதும் அலராகப் பரவியது.

5)
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து (126)

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.(இக்குறளில் 1,5,7 என பகாஎண்கள்)

Monday, September 9, 2019

குவளை மலரும்..தாமரையும் - 51

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு (595)

இக்குறளில் தாமரை என்று தனித்து சொல்லாவிடினும்..தண்ணீரில் மலர்வது தாமரை அல்லவா? ஆகவே இக்குறளில் அவர் தாமரை மலரைத்தான் சொல்லியிருக்கக் கூடும்

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும்.அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்

2)தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
  தாமரைக் கண்ணான் உலகு (1103)

தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களெ, அது என்ன!  அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

3)
காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114)

என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், "இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே" எனத் தலைக்குனிந்து நிலம் நோக்கும்

மணமில்லா மலரையும் வள்ளுவர் விட்டு வைக்கவில்லை..

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார் (650)

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர் கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்

வள்ளுவரும் அனிச்சமலரும் - 50


வள்ளுவர் அனிச்ச மலர் பற்றி நான்கு குறள்களில் சொல்லியுள்ளார்..

அவற்றைப் பார்ப்போம்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (90)

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடிவிடக் கூடியது.அதுபோல சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடி விடுவர்

2)நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
 மென்னீரள் யாழ்வீழ் பவள் (1111)


அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுமின்றேன்.ஆனால் அந்த மலரை விட மென்மையானவள் என் காதலி

3)
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை (1115)

அவளுக்காக நல்ல பறை ஒலிக்கவில்லை.ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்.காரணம் அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக் கொண்டதுதான்

4)
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120)

அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவிற்கு என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மை வாய்ந்தவை.

(நெருஞ்சிப் பழம் என்கிறார்.அனிச்ச மலர்,அன்னப்பறவை).

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 49


"இப்பிறவியில் யாம் பிரியமாட்டோம்" என்று சொன்னவுடன், "அப்படியானால்..மறுபிறப்பு என்று ஒன்று உண்டா? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படும் என்று சொல்கிறாயா"? எனக் கேட்டு கண் கலங்குவாளாம் காதலி.

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று (1314)

"யாரைக்காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்" இன்று இயல்பாகச் சொன்னதைக் கூட காதலி தவறாக எடுத்துக் கொண்டு "யாரைக்காட்டிலும்..யாரைக்காட்டிலும்" எனக்கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டால்

யாரினும்,யாரினும், யாரினும்....இது வள்ளுவரின் விளையாட்டு

இக்குறள் புலவி நுணுக்கம் எனும் அதிகாரத்தில் வருகிறது.

வள்ளுவனும் சொல் விளையாட்டும் - 48

ஊடுவதற்காகச் சென்றாலும் கூட, அதை நெஞ்சம் மறந்து விட்டு கூடுவத்ற்கு இணங்கிவிடுவதே காதலின் சிறப்பு

புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில் இப்படி சொல்லும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்.

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது.அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

இந்த அதிகாரத்தில் அவரின் சொல்விளையாட்டினைப் பார்ப்போமா..

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை (1286)

விளக்கம்..
அவரைக் காணும்போது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை.அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

காணுங்கால்,காணேன்,காணாக்கால்,காணேன்

Sunday, September 8, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 47

உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள் அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்..

இழித்துப் பேசாமலும் ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உள்ளவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்புறும்

இரவு அதிகாரத்தில் இப்படியெல்லா, சொன்னவர் அடுத்து இரவச்சம் அதிகாரத்தில் சொல்கிறார்..

வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை

என்றும்..

கூழ்தான் குடிக்க வேண்டும் என்னும் நிலையானாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை

என்றும் சொல்கிறார்.

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரபபர் இரவன்மின் என்று (1067)

கையில் உள்ளதை மறைத்து "இல்லை"என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன்

இரப்பான், இரப்பாரை,இரப்பிற்,கரப்பர்,இரவன்


வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 46

ஒருவனுக்கு வறுமையின் காரணமாக பேறாசை ஏற்படுமேயாயின்,அது அவனுக்கு பரம்பரைப் புகழையும்,பெருமையையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

மேலும், வறுமை எனும் துயரத்திலிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது(1041)

இன்மை,இன்னா,இன்மை,இன்மையே,இன்னா...வள்லுவரின் சொல்விளையாட்டு இது..

வறுமைத் துன்பத்திற்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் ஏதுமில்லை.

வறுமைக்கு சொல்ல உவமைகூட ஏதுமில்லையாம்.என்னே ஒரு சிந்தனை.

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 45

பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த  உலகம் ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது.எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

உழவு என்றே உழவுத் தொழிலுக்கு ஒரு தனி அதைகாரததை எழுதியுள்ள வள்ளுவரின் கூற்று இது.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் (1034)

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்..என இக்குறளில் உழவு செய்பவரைப் புகழ்கிறார்.

பலகுடை,தங்குடை,அலகுடை
நீழல், நீழலவர்

வள்ளுவரின் குறும்பினை இக்குறளில் பாருங்கள்..

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும் (1039)

உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகி இருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்..

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 44

நாணுடமையில் சொல்கிரார்..

உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்

தமக்கு வரும் பழிககாக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்து நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான ஊரைவிடமாவார்

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர் (1017)

நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள்.உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்

நாணால்,நாண்,நாணாள்  

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 43

பிறப்பினால் அனைவரும் சமம்.செய்யும் தொழிலில் காட்டுகின்ற திறமையில் மட்டுமே வேறுபாடு காணமுடியும்..

இப்படி :"பெருமை" எனும் அதிகாரத்தில் சொல்பவர் மேலும் சொல்கிறார்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர் (973)

பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்ல.இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரே ஆவார்கள்.

மேலிருந்தும்,மேலல்லார்,மேலல்லர், கீழிருந்தும், கீழல்லார், கீழல்லவர்  ..வள்ளுவரின் சொல் விளையாட்டு இது

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல் (979)

ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும்.ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்

பெருமை,பெருமிதம்,இன்மை, சிறுமை, பெருமிதம்...

Saturday, September 7, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 42

புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டு மென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்

சீரினும் சீரல்ல செய்வாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர் (962)

சீரினும்,சீரல்ல, சீரொடு

அடுத்து கொல்கிறார்

குன்றின் அணையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அணைய செயின் (965)

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்

குன்றின்,குன்றுவர்,குன்றுவ,குன்றி..இது வள்ளுவனின் தமிழ் விளையாட்டு.

இக்குறள்கள் வரும் அதிகாரம் மானம்

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 41

பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக் கூட ஒருவன் கொள்ளக் கூடாது

அதேபோல...தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதை விட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்

இப்படியெள்லாம் பகைத்திறம் தெரிதல் அதிகாரத்தில் சொல்லியுள்ள வள்ளுவர்..இவ்வதிகாரத்திலும் தன் சொல் விளையாட்டு ஒன்றினைக் காட்டியுள்ளார்.

தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல் (876)

பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களை பிரிந்துவிடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்

தேறினும், தேறாவிடினும், தேறான்..

Friday, September 6, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 40

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்களைக் கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது

என்று புல்லறிவாண்மையில் சொல்லுபவர் மேலும் சொல்கிறார்..

ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்

இந்த அதிகாரத்திலும் அவர் தன் சொல் விளையாட்டினைக் காட்ட மறக்கவில்லை

காணாதான் காட்டுவான் தான்காணாண் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு (849)

அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான்.அவனை உண்மையிலேயே அறுவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.

காணாதான், காட்டுவான்,காணான், காணாதான்.கண்டானாம்,கண்டவாறு

வள்லுவரின் சொல் விளையாட்டு - 39

பேதைமை...

கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல் (832)

பேதைமை, பேதைமை,காதன்மை

தன்னால் இயலாத செயல்களை விரும்பி அவற்றில் தலையிடுவது என்பதௌ பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில் (833)

நாணாமை,நாடாமை,நாரின்மை,பேணாமை

வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும் ,அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைமைகளின் இயல்பாகும்.




வள்ளுவரின் சொல் விளையாட்டு- 38

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகும் அளவிற்கான துயரத்தை உண்டாக்கி விடுமாம்.

ஒருவரின் குணம்,குடிப்பிறப்பு.குற்றங்கள்.குறையா இயல்புகள் என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்பு கொள்ள வேண்டும்.

இதையே

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு (793)

என்கிறார்.

குணன், குடிமை, குற்றம்,குன்றா...

அடுத்து

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு (791)

என நட்பாராய்தல் அதிகாரத்திலேயே இக்குறலினையும் சொல்லியுள்ளார்.

நாடாது, நட்டல்,நட்டபின்,நட்பு

விளக்கம்-
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவிற்குக் கேடுகளை உண்டாக்கும்

Thursday, September 5, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 37

நட்பு கொள்வது போன்ற அரிய செயல் இல்லை.அதுபோல பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

வெறும், சிரித்து மகிழ மட்டுமே நட்பு அல்ல.நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்து திருத்துவதற்காகவும் ஆனதே!

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பப்போல பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பாகும்.

இப்படியெல்லாம் நட்பு எனும் அதிகாரத்தில் சொன்னவரின் சொல் விளையாட்டு எங்கே?

இதோ இந்தக் குறளில்...

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு (786)

முகநக, அகநக,நட்பது,நட்பன்று,நட்பு

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு  அடையாளமல்ல.இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 36

அதிகாரம் - பொருள் செயல்வகை

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது

ஆனால், பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார்.
அவரின் சொல்விளையாட்டை கீழ்கண்ட குறளில் பாருங்கள்...

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் (751)

பொருளல்ல,பொருளாக, பொருளல்ல, பொருள்

விளக்கம்-
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக் கூடிய அளவிற்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 35

ஆழமும், அகலமும் கொண்ட அகழ்.பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத் தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்ரை உடையதே அரணாகும்.

தவிர்த்து, உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை  அழிக்கக் கூடியதே அரண் ஆகும்.

அரண் பற்றிய அதிகாரத்தில் இவையெல்லாம் கூறுபவரிடமிருந்து, இவ்வதிகாரத்தில் சொல்விளையாட்டு இல்லாமலா? அதையும் பார்ப்போம்.

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண் (748)

முற்றாற்றி,முற்றிய, பற்றாற்றி, பற்றியார்

சரி இதற்கான பொருள்...

முற்றுகையிடும் வலைமைமிக்க படையை எதிர்த்து,உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கேற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 34


ஆறு கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும் வருபுனலாம் மழையும்,வலிமைமிகு அரணும் ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்

நல்ல  அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்

நாடு அதிகாரத்தில் மேலும் சொல்கிறார்..

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு (739)

இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

நாடென்ப,நாடா, நாடல்ல, நாட,நாடு...இதுதான் வள்ளுவர்

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 33

அவை அஞ்சாமை இது அதிகாரம்

குறள்..

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார் (722)

கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனதில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்

கற்றாருள், கற்றார், கற்றார்முன்,கற்ற இது இவருடைய விளையாட்டு

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர் (723)

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல்.அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரே ஆவர்.

பகையகம், அவையகம்
சாவார்,எளியர், அரியர்

Wednesday, September 4, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 32

முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதைப்போல அதிகம் நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலுமாக இருப்பார்கள் எங்கிறார் மன்னரைச் சேர்ந்து ஒழுகல் அதிகாரத்தில்.மேலும்....

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும் (692)

மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமென தாமும் விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தைத் தரும்.

இக்குறளில், மன்னர்,மன்னரான்,மன்னிய,விழைப,விழையாமை என்ற விளையாட்டினை ரசித்தீர்களா?!

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 31


தூது அதிகாரத்தில் தூதுக்குரிய தகுதியாக சொல்கிறார்..

அன்பான குணமும் புகழ் வாய்ந்த குடிப்பிறப்பும் அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பது தூதுக்குரிய தகுதிகளாகும்

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு (688)

துணிவு,துணை,தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவருக்குத் தேவயானவைகளாகும்

தூய்மை,துணைமை,துணிவுடைமை, வாய்மை...!!!!

விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன் (689)

விடுமாற்றம்,வடுமாற்றம்..

ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்

Tuesday, September 3, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 30

ஒரு செயலில் ஈடுபடுகிறவன் அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல் (677)

செய்வினை, செய்வான், செயன்முறை, உள்ளறிவான், உள்ளம்

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானயாத் தற்று (678)


ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்

வினையான், வினையாக்கி,யானையால் யானையா

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல் (679)

நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் விரைந்து செய்யத் தக்கதாகும்

நட்டார்க்கு,நல்ல,ஒட்டாரை, ஒட்டி

இக்குறள்கள் எல்லாம் வரும் அதிகாரம் வினைசெயல் வகையாகும்

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 29


ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும் போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்களை பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும்.முடிவெடுத்தப் பின் காலந் தாழ்த்துவது தீதாக முடியும்

வினை செயல்வகையில் மேலும் சொல்கிறார்..

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை (672)

தூங்குக, தூங்கி,தூங்கற்க, தூங்காது....அடடா...

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்.ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல் (673)

ஒல்லும்வாய், ஒல்லாக்கால், செல்லும்வாய்...

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 28

வினைத்திட்பம் எனும் அதிகாரத்தில் சொல்கிறார்..

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக்கூடியதேயாகும்.

உருவத்தால் சிறியவர்கள் என யாரையும் அலட்சியப்படுத்தக் கூடாது.பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என எண்ண வேண்டும்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (666)

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவராக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்

எண்ணிய,எண்ணியாங்கு,எண்ணியார்,திண்ணியர்..வள்ளுவரின் விளையாட்டு

Monday, September 2, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 27

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை.எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும் என் கிறார் வள்ளுவர் "சொல்வன்மை" எனுன் அதிகாரத்தில் கீழ்கண்ட குறள் மூலம்..

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று (641)

நாநலம்,நலனுடைமை,அந்நலம்,யாநலம் என விளைடியவர் மேலும் சொல்லை வைத்து தமிழ் விளையாட்டு விளையாடுகிறார்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து (645)

சொல்லுக, சொல்லை,பிறிதோர் சொல்,அச்சொல்லை,வெல்லுஞ்சொல் என..

இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 26

சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.

வெள்ளம்போல துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயெ அத்துன்பம் விலகி ஓடிவிடும்.

இடுக்கண் அழியாமையில் இப்படியெல்லாம் சொன்ன வள்ளுவர் மேலும் சொல்கிறார்..

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர் (623)

துன்பம் சூழும்போது, துவண்டு போகாதவர்கள்,அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்

இடும்பை,இடும்பை,இடும்பை,இடும்பை என இடும்பையை நான்கு இடங்களில் சொல்லி சொல் விளையாட்டினை விளையாடுகிறார்.

இன்பத்துள் இன்பம் விழியாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன் (629)

என்று மற்றொரு குறளில் இன்பத்துள் இன்பம், துன்பத்துள் துன்பம் என்கிறார்.

இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள்,துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள்.இரண்டினையும் ஒன்றுபோல் கருதுவர்.

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 25

ஆள்வினை உடைமை

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும்.இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாக ஆகிவிடும்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு (612)

வினைக்கண், வினைகெடல்,வினைக்குறை,தீர்ந்தார்,தீர்ந்தன்று

அடுத்து

ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையில் வாள்தூக்கி வீசுவத்ற்கும் வேற்பாடு ஒன்றுமில்லை

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும் (614)

தாளாண்மை,வேளாண்மை,வாளாண்மை

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 24

ஒற்றாடல்...

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் (588)

ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்தப் பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்

ஒற்றொற்றி, ஒற்றினால், ஒற்றி...இக்குறளில் சொல்விளையாட்டு

வள்லுவரின் சொல்விளையாட்டு - 23

கண்ணோட்டம் எனும் அதிகாரத்திலிருந்து சில குறள்கள்..

அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக் இருப்பவர்கள் இந்தப் பூமிக்கு சுமையாவார்கள்

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண் (573)

இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்

பண்ணென்னாம்,கண்ணென்னாங், கண்ணோட்டம் , கண் என விளையாடியவர் அடுத்தும் ஒரு சொல்விளையாட்டை நிகழ்த்துகிறார்.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் (577)

கண்ணோட்டம், கண்ணிலர்,கண்ணுடையார், கண்ணோட்டம்...

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்.கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்

Sunday, September 1, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 22

கொடுங்கோன்மை அதிகாரத்திலேயே வரும் மற்ற குறளினையும் பார்ப்போம்..

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (557)

நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஒரு அரசுக்கு புகழைத் தரும்.இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னவாம் மன்னர்க் கொளி (556)

மன்னர்க்கு,மன்னுதல்,மன்னவாம், மன்னர்க்கு..இதுதான் வள்ளுவர்.

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 21

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு,கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (552)

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

இக்குறளில் வேலொடு, கோலொடு  எனச் சொல்பவர் அடுத்த குறளில் சொல்கிறார்..

நாடொறும் நாடி முரைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும் (553)

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர் குலைந்து போய்விடும்

நாடொறும், நாடி,நாடொறும்,நாடு...இது வள்ளுவரின் சொல்லாட்சி ஆகும்

மேற்சொன்ன குறள்கள் வரும் அதிகாரம் கொடுங்கோன்மை ஆகும் 

Saturday, August 31, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 20

தெரிந்து தெளிதல் இது அதிகாரம்

ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதிப் புரிந்து கொள்ளலாம் என்றும்..

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து அமர்த்திக் கொண்டால், அவரால் வருங்காலத் தலைமுறையினருக்கும் நீங்காத துன்பம் விளையும் என்றும் சொல்கிறார்.

அத்துடன் நில்லாது...கீழ்கண்ட குறளினையும் தனது வழக்கமான சொல்விளையாட்டுடன் சொல்கிறார்

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள் (509)

நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக்கூடாது

தேறற்க,தேராது, தேர்ந்தபின்,தேறுக, தேறும்....வள்ளுவர்க்கு நிகர் வள்ளுவரே  தேர்ந்த உண்மை 

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 19

வலியறிதல் எனும் அதிகாரத்தில் சொல்கிறார்..


ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது ஏதுமில்லை.

ஆனால்..தனது வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் உண்டு

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல் (471)

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை இரு சாரார்க்கும் துணையாக இருப்போரின் வலைமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்

வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி...பார்த்தீர்களா தெய்வப்புலவனின் வலிமையை!!!

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 18

நன்கு சிந்தித்தப் பின்னே ஒரு செயலில் ஈடுபட வேண்டும்.ஈடுபட்டப்பின் சிந்திப்போம் என்பது தவறு.

தம் நிலைமைக்கு  மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் (466)

செய்யக் கூடாததைச் செய்வதால்  கேடு ஏற்படும்.செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்

செய்தக்க,செய, செய்தக்க, செய்யாமை என தெரிந்து செயல்வகை எனும் அதிகாரத்தில் வள்ளுவனின் சொல்விளையாட்டு இது

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 17

அதிகாரம் - பெரியாரைத் துணைக்கோடல்

அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அத்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்..
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும் என்றும் சொல்லு வள்ளுவர்

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் (445)

என்கிறார்.

கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதெ ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும்.

சூழ்வார், சூழ்வாரை, சூழ்ந்து...பொய்யாமொழியாரின் விளையாட்டு

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 16

அதிகாரம் அறிவுடைமை..

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்

வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச்வார்கள்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில் (428)

அஞ்சுவது, அஞ்சாமை அஞ்சுவது,அஞ்சல்.. வள்ளுவரின் விளையாட்டு

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 15

செவி வழியாக இன்பம் தரும் செவியுணவு இல்லாத போது சிறிதளவு உணவு வயிற்றுக்கும் கொடுக்கப்படும்

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேள்விச் செல்வம், வழுக்கு நிலத்தில் நடக்கும் போது ஊன்றுகோலாய் பயன்படும்...

இப்படியெல்லாம் கேள்வி எனும் அதிகாரத்தில் சொன்னவர் மேலும் சொல்கிறார்.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை (411)

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

செல்வத்துள்,செல்வம், செவிச்செல்வம்,அச்செல்வம், செல்வத்துள்....ஆஹா....

Friday, August 30, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 14

அவா அறுத்தல் அதிகாரம்..

ஆசையை விட்டொழிக்க வேண்டும்.

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும்  .அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும் (362)

விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணுகின்ற அளவிற்கு ஏற்படுகிற துன்பநிலை ,ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்

வேண்டுங்கால், வேண்டும், வேண்டாமை, வேண்ட... வள்ளுவரின் விளையாட்டு..

அடுத்து

அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர் (365)

ஆசை அனைத்தையும் விட்டவரே துறவி எனப்படுவார்.முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

அற்றவர்,அற்றார்,அற்றாக, அற்றது....

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 13

துறவு அதிகாரத்திலேயே வள்ளுவரின் மேலும் சில சொல் விளையாட்டுகளைப் பார்ப்போம்

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு (347)

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன

(பற்றிவிடா,பற்றினை, பற்றிவிடா)

மேலும் சொல்கிறார்...

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (350)

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கின்றாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும்.துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்

(பற்றுக,பற்றற்றான்,பற்றினை,பற்றுக, பற்று...)

வள்ளுவரின் சொல்விளையாட்டு- 12

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க வேண்டுமாயின், எல்லாம் இருக்கும் போதே அவற்றைத் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

எதன் மீதும் பற்று இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும்.ஒன்றின் மேல் பற்று வைப்பினும்,அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.

துறவு எனும் அதிகாரத்தில் இப்படியெல்லாம் சொன்னவர் மேலும் சொல்கிறார்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (341)

ஒருவன் பலவகையான பற்றுகளில் எந்த ஒன்றினை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம் அவனை அணுகுவதில்லை

யாதனின், யாதனின், அதனின், அதனின் ..வள்ளுவரின் சொல்விளையாட்டு 

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 11

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாது.ஒருவருக்குத் தீங்கு விளைவித்து விட்டோம் என ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே,அதே போன்ற தீங்கு அவரையே தாக்கும்.

இன்னா செய்யாமை அதிகாரத்தில் இப்படிச் சொல்பவர்..சொல்கிறார்...

நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை  வேண்டு பவர் (320)

தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்.எனவே தீங்கற்ற வாழ்வினை விரும்புபவர்கள், பிறருக்குத் தீங்கிழைக்கக் கூடாது

நோயெல்லா, நோய்செய்தார்,நோய்செய்யார். நோயின்மை..அடடா...என்னே ஒரு சொல் விளையாட்டு 

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 10

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால், எண்ணியவற்றையெல்லாம் அவனால் உடனடியாகப் பெற முடியும்

என்று சொன்னவர்...மேலும் சொல்கிறார்..

ஒருவன் தன்னத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தை கைவிட வேண்டும்.இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

வெகுளாமை அதிகாரத்தில் வருபவை இவை.

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (310)

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார்கள்.சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர்

இறந்தார், இறந்தார்,துறந்தார்,துறந்தார்...வியக்க வைக்கிறது அல்லவா?

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 9

வாய்மை எனும் அதிகாரத்தில் சொல்கிறார்..

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை.என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்

மேலும் சொல்கிறார்..

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (297)

செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்

பொய்யாமை,பொய்யாமை, செய்யாமை, செய்யாமை..கவனித்தீர்களா?

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமெ நீங்கும்.மனம் அழுக்குப் படாமல் தூய்மையுடன் விளங்கிட சொல்லிலும், செயலிலும் வாய்மை வேண்டும்

என்றவர்...

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு (299)

என்கிறார்.

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளினைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தவன் எனக் காட்டும் ஒளிவிளக்காகும்

விளக்கும், விளக்கு,விளக்கே, விளக்கு !!!!!! 

Thursday, August 29, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 8

ஒவ்வொருவரும் புகழுடன் விளங்க வேண்டுமாம்.புகழ் எனப்படுவது உயிர் போலவாம்.உகழ் எனப்படும் உயிர் இல்லாத மனித உடலைச் சுமந்தால், இந்தப் பூமி நல்ல விளைச்சலில்லாத நிலமாகக் கருதப்படுமாம்

நம் காலத்திர்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழினைப் பெறாவிட்டால்,அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழி என வையம் கூறும்

மேலும் சொல்கிறார்..

நாம் ஏதேனும் ஒரு துறையினில் ஈடுபட விரும்பினால்,அத்துறையில் ஈடுபட்டு புகழுடன் விளங்க வேண்டும்.இல்லாதவர்கள் அத்துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (236)

புகழ் எனும் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இக்குறளில் ..தோன்றின்,தோன்றுக,தோன்றலின், தோன்றாமை என தமிழ் விளையாடுகிறது அல்லவா?

இதே அதிகாரத்தில் மற்றொரு குறளில் சொல்கிறார்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர் (240)
என்கிறார்.

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும்.புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.

வசையொழிய, இசையொழிய என சொல்விளையாட்டில் இடுபட்டவர் தொடர்ந்து வாழ்வாரே,வாழ்வார்,வாழ்வாரே,வாழாதவர் என்றும் தன் விளையாட்டினை இக்குறளில் தொடர்ந்துள்ளார்

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 7

ஈகை எனும் அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார்..

இல்லாதவர்களுக்கு வழங்குவதே ஈகப் பண்பாகும்.மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

நாம் வறுமையில் வாடினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறப்பவரின் பண்பாகும்

இப்படிச் சொன்னவர் மேலும் சொல்கிறார்//

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின் (225)


பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பினைகடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்தாகும்.

ஆற்றுவாராற்றல், பசியாற்றல்,மாற்றுவாராற்றல்...சொல்விளையாட்டு

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 6

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்.தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்

மறந்தும் கூட மற்றவருக்குக் கேடு நினைக்கக் கூடாது.

தீயவை,தீய,தீயவை,தீயினும் என கிழ்கண்ட குறளில் வள்ளுவரின் விளையாட்டினை ரசியுங்கள்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் (202)

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையாகக் கருதி அவற்றை செய்திட அஞ்சிடவேண்டும்


Wednesday, August 28, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 5

பயனற்றவற்ரைச் சொல்லிப் பயன் பெற எண்ணுபவர்கள், மனிதன் என்பதைவிட ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

மாசற்ற அறிவுடையார் மறந்தும் பயனற்றவற்றைச் சொல்ல மாட்டார்கள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் (200)

பயனளிக்காத சொற்களை விடுத்து மனதில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையெ கூற வேண்டும்..

சொல்லுக, சொல்லிற்,சொல்லற்க, சொல்லிற், சொல்
என்னே ஒரு சொல் விளையாட்டு!!

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 4

ஒருவர் நமக்குச் செய்த கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்ரு விட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு.ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை..

என்றெல்லாம் சொன்ன வள்ளுவர் மேலும் சொல்கிறார்...

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று (108)

என.
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல.அவர் தீமைசெய்திருந்தால் அதை மட்டும் அக்கணமெ மறந்து விடுவது நல்லது.

நன்றி,நன்றன்று,நன்றல்லது, நன்று  என்ற சொல்விளையாட்டை ரசிப்போம் 

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 3

விருந்தினரை வெளியே விட்டு விட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும், அதைத்தான் மட்டுமே உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல என்றும்.

விருந்தினரை நாள் தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை என்றும்

'விருந்தோம்பல்" அதிகாரத்தில் சொன்னவர்..மேலும் சொல்கிறார்....

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு (80)

என்று..

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய  விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

செல்விருந்து, வருவிருந்து,நல்விருந்து....தமிழ் விளையாட்டு.


Tuesday, August 27, 2019

வல்லுவரின் சொல் விளையாட்டு - 2

சான்றோர் எனபப்டுபவர்கள் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு அருள் பொழிவர்.அவர்கள் பெருமை இவ்வுலகில் அழியாது நிலைத்து நிற்கும்.

அவர்கள்கோபப்படமாட்டார்கள்.அப்படியே அவர்களுக்கு கோபம் வருமாயின் அக்கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

இப்படி சான்றோர் பெருமைகளை  நீத்தார் பெருமை எனும் அதிகாரத்தில் சொல்லியுள்ள வள்ளுவர்..சான்றோரை கீழே  குறிப்பிட்டுள்ள குறளில் பெரியோர் என்கிறார்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (26)

செயற்,செய்வர்,சிறியர்,செயற்,செய்கலாதார் என தமிழில் விளையாடுகிறார்

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்து விட முடியும்.

Monday, August 26, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 1


வள்ளுவர் ஒன்றே முக்கால் அடியில் ..பல வரிகளில் சொல்ல வேண்டிய கருத்துகளை, அறிவுரைகளை, நீதிபோதனைகளைக் கூறியுள்ளார்.

தவிர்த்து...அவரின் சொல் விளையாட்டு பல குறள்களில் நம்மை வியக்க வைக்கின்றது.

அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இனிக் காண்போம்.தமிழை ரசிப்போம்.

இனி வான் சிறப்பு எனும் அதிகாரத்தில் இருந்து ஒரு குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.... 

இது சாதாரணமாக...திருக்குறள் தெரியுமா?  எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
இக்குறளுக்கான பொருள் என்ன? பார்ப்போம்..

இது என்ன  ஒரே துப்பா இருக்கின்றது ..என்கிறீர்களா?

அந்தத் துப்பாக்கள் ஏந்தி வரும் அர்த்தம் என்ன?..

இன்று  பருவ மழை பொய்த்ததால்..விளை நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.நெல் சாகுபடி செய்வது கடினம்...என்றெல்லாம் படிக்கிறோம்..பார்க்கிறோம்..

மழை...மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத் தர முக்கியமாய் பயன்படுகிறது.

அதே மழை தரும் நீர், மக்களுக்கு குடிநீராகவும் ஆகி..மக்களை வாழ்விக்கிறது.

இப்படி பெரிய தியாகத்தை செய்யும் அம்மழை...நான் அதைச் செய்தேன்..இதைச் செய்தேன் மக்களுக்கு என அரசியல் பண்ணுவதில்லை.இதைத்தான் இக்குறள் சொல்கிறது.

இனி....மேற் சொன்ன குறளுக்கான உரை-

மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ,அவர்களுக்கே அம்மழை அருந்தும் உணவாகும் ஆகிய தியாகத்தையும் செய்கிறது.

(துப்பார்க்கு = உண்பார்க்கு துப்பாய = உணவு ஆகி துப்பு ஆக்கி = உடலை வலிமைப் படுத்துகிறது. துப்பார்க்கு = அனுபவிக்கும் அறிவுள்ளார்க்கு துப்பாய = பொலிவு வலிமையுடன் தூய்மையான உடலையும் உண்டாக்குகிறது. துவும் மழை = தூய்மையாகப் பெய்கிற மழை. சொல் விளக்கம்: துப்பார் = உண்பவர், துப்பு = அறிவு, அனுபவம், உணவு, தூய்மை, நன்மை, பொலிவு, வலிவு; துப்புஆக்கி - என்பதே துப்பாக்கி ஆயிற்று, து =து என்றால் தூய்மை; உம் - ஒரு சிறப்புப் பொருள். முற்கால உரை: உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாவது மழையாகும். தற்கால உரை: உண்பவர்க்கு வேண்டிய உணவுப் பொருளை உண்டாக்கி உண்பவர்க்குக் குடிநீர் என்னும் உணவாகி இருப்பதும் மழையேயாம்)

Wednesday, August 14, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 186

காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாய் இருந்தாலும் அதனால் விளைகின்ற சிறு  துன்பமும் பெருமையுடையதாம்.

அன்புடன் கூடியிருக்கும் காதலர்களின் ஊடல் நிலத்தோடு நீர் கலந்தது போலவாம்

புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து (1323)

நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதைவிட புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?

தவறே செய்யாத நிலையிலும், தன் உள்ளம் கொள்ளை கொண்டவளிடம் ஊடல் கொள்வதில் கூட ஓர் இனபம் உள்ளதாம்

உணவு அருந்துவதை விட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் உண்டு அதுபோல உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம் உணடாம் 

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 185

ஊடல் கொண்டிருந்த போது அவர் தும்மினார்.ஊடலை விடுத்து அவரை "நீடூழி வாழ்க' என வாழ்த்துவேன் என எண்ணி...என்கிறாள் காதலி

அன்புள்ளவர்களிடம் தான் ஊடல் இன்பமானதாக இருக்குமாம்

அதற்கு எதை ஒப்பீட்டு சொல்கிறார் தெரியுமா?

நிழலுக்கு அருகில் உள்ள நீரை.அந்நீர்தான் குளிர்ந்து இனிமையாய் இருக்குமாம்

நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது (1309)

நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்.அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 184

காதலரிடையே ஊடல்.இதனால் அவர்களின் இன்பமான காலத்தில் அளவு குறைந்துவிடுமே என்ற ஒருவகைத் துன்பமும் அவர்களுக்கு ஏற்படுமாம்.

காதல் வாழ்க்கையில் பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் அவ்வப்போது ஏபட வேண்டுமாம்.அபப்டியில்லை எனில் அது எப்படிப்பட்டது போலாகுமாம் தெரியுமா?

முற்றிப் பழுத்து உபயோகமின்றி அழகிய பழம் போலவும் (பெரும்பிணக்கு), முற்றாத இளம் பிஞ்சு போலவும் (சிறுபிணக்கு)  ஆகுமாம்

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று (1306)

பெரும்பிணக்கும், சிறுபிணக்கம் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.

Tuesday, August 13, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 183

மலர் விழி  மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்..என்னும் வள்ளுவர் விழிகளை மலருக்கு ஒப்பிடுகிறார் ஒரு குறளில்

அடுத்து...

ஒரு கொடி வாடியிருக்கிறது.அதன் அடிப்பகுதியை அறுத்தால் என்னவாகும் அதுபோலவாம் ஊடல்புரிந்து பிணங்கி இருப்பவரிடம் அன்பு செலுத்தாமல் விலகியே இருப்பது

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று(1304)

ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.  

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 182

காதலில் ஊடலுக்கு ஒரு சிறப்பு இடமுண்டு.

ஊடல் காதலினை வளர்க்கும்.ஆனால் அவ்வூடல் ஓரளவுடன் இருக்க வேண்டும்.அப்படியின்றி கால அளவு நீடித்தால்..அக்காதலே கேள்விக்குறியாகிவிடலாம்.

ஊடலுக்கும், கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல ஓரளவே இருக்க வேண்டுமாம்.வள்ளுவனின் ஒப்பீட்டினைப் பாருங்கள்..

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல் (1302)

ஊடலுக்கும், கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும்.அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்

ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கி வருத்துவதாகுமாம்

அலைந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல் (1303) 

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 181

நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனத் தெரிந்தும், என் நெஞ்சே! அவரையே நாடிச் செல்கின்றாயே ஏன்? என்கிறாள் காதலி.

உடுக்கை இழந்தவன் கை போல நண்பனுக்கு இடுக்கண் வந்தால் அதைப் போக்க உதவுவது கைகள் என்பது..பொய்த்துவிடுமோ என அஞ்சுகிறாள்..

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டங் கவர்பின் செலல் (1293)

நெஞ்சே! நீ என்னை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவா?

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 180

மது அருந்தினால்தான் இன்பம்.ஆனால் காதல் நினைத்தாலே இன்பமாம் .

காதலர்களுக்கிடையே காதல் பனையளவாகப் பெருகிடும் போது ஊடலும் தினையளவாவது இல்லாமல் இருக்காதாம்.

காதலன் பிரிந்து செல்கிறான்..பின்னர் அவனைக் காணும்போது அவன் பிரிந்து சென்ற குற்றத்தை காதலி மறந்துவிடுகிறாளாம்.எதுபோல தெரியுமா..கண்ணில் மைதீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோல் காணாமல் போனதுபோலவாம்

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து (1285)

அடுத்து..

காதலனுடன் ஊடல் கொள்கிறாள்..ஆனால் அந்த ஊடலால் பலன் ஏதும் இருக்கப் போவதில்லை என அறிந்தும்.இது எப்படியிருக்கிறது என்றால்..வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போலவாம்.

உய்த்தல் அறிந்து புனல்பாய்  பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலத்து (1287)

மேலும் சொல்கிறார்

காதல் இன்பம் மலரைவிட மென்மையானதாம்.அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் (1289) 

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 179

கண் நிறைந்த அழகும், மூங்கில் போன்ற தோளும் என காதலியின் தோள்களை மூங்கிலுக்கு ஒப்பிடும் வள்ளுவர்..

பெண்ணின் அழகுக்கு உள்ளே ஒன்று உள்ளதாம்.அது எதுபோலவாம் தெரியுமா? மணிகள் கோர்த்த மாலையின் உள்ளே மறைந்திருக்கும் நூல் போலவாம்

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு (1273)

மணியாரத்துக்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உள்ளது

ஒரு பெண்ணின் புன்னகைக்குள் காதலனைப் பற்றிய நினைவு உள்ளதாம் எதுபோல தெரியுமா? மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பதைப் போலவாம்.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு (1274)

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பதுபோல் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்ரிய நினைவும் நிரம்பியிருக்கிறது

Monday, August 12, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 178

காதல் வேட்கை இரக்கமே இல்லாததாம்.ஏனெனில், அது நள்ளிரவிலும் நெஞ்சில் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்குமாம்.

ஒரு கோடாரி, தாழ்ப்பாள் போடப்பட்ட கதவினை எப்படி உடைத்தெறிகிறதோ அதுபோல காதல் வேட்கை , மன அடக்கத்தையே வெட்டி வீழ்த்துகிறதாம்.

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு (1251)

காதல் வேட்கை, ஒரு கோடாரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்னும் கதவினையே உதைத்தெறிந்து விடுகின்றது.

மேலும் சொல்கிறார்...

நமக்கு தும்மல் வருகின்றது.எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் அது நம்மையும் மீறி வெளிப்படுகிறதே அதுபோலவாம் காதல் உணர்ச்சி.என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடுமாம்

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும் (1253)

அடுத்து..
நெருப்பில் இட்ட கொழுப்பினைப் போல உருகிடும் நெஞ்சம் என்கிறார் இக்குறளில்..

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்போம் எனல் (1260)

நெருப்பிலிட்ட கொழுப்பினைப்போல உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்கமுடியுமா?

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 177

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து மாலையில் மலரும் ஒரு நோயாகுமாம்.



காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய் (1227)

மாலையில் காதலர் பிரிந்துள்ள நிலையில், ஒரு மாடுமேய்ப்பவன் புல்லாங்குழல் வாசிக்கின்றானாம்.அந்த புல்லாங்குழலோசை காதலிக்கு அவளைக் கொல்ல நினைக்கும் படைக்கருவியின் ஓசை போல உள்ளதாம்.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப் பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயலின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசை போல அல்லவா காதில் ஒலிக்கிறது.

வள்லுவரும் ஒப்பீடுகளும் - 176

மயக்கம் தரும் மாலைப்பொழுது.

காதலரைப் பிரிந்து காதலி தவிக்கின்றாள்.அவனை இரக்கமற்றவன்  என்கிறாள்..அதற்குத் துணையாக மாலைப்பொழுதையும் துணைக்கு இழுக்கின்றாள்

மயங்கும் மாலைப் பொழுதே!நீயும் எம்மைப்போல துன்பப்படுகிறாயே!எம் காதலர் போல உன் துணையும் இரக்கமற்றதோ?! என்கிறாள்.

அதே மாலைப்பொழிதினை எப்படி இருக்கிறது என்றும் சொல்கிறாள்

 காதலர் பிரிந்திருக்கும் போது வரும் மாலைப்பொழ்து, கொலைக்களத்தில் பகைவர் வீசும் வாளினைப் போல இருக்கிறதாம்.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும் (1224)

காதலர் பிரிந்திருக்கும்போது வருகின்ற மாலைப்பொழுது கொலைக்களத்தில் பகைவர் ஓங்கி வீசுகின்ற வாளைப்போல  வருகிறது

Sunday, August 11, 2019

வள்ளுவரும்..ஒப்பீடுகளும் - 175

சாதாரணமாக கள் உண்பவர்கள் போதைத் தரும் இன்பத்திற்காக உண்பதாகக் கூறுவர்.

ஆனால்...கள் உணாடாக்கும் போதையைவிட இன்பம் தரக்கூடியது ஒன்று உண்டாம்.அது காதல் இன்பமாம்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது (1201)

உண்டபோது மட்டும் மகிழ்ச்சியினைத் தரும் கள்ளினை விட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்

காதலன், காதலியைப் பிரிந்து சென்றுள்ளான்.மாலை நேரம் அவளை வாட்டுகிறது.அவளுக்கு அவளது உயிரைக் குடிக்கும் வேலாக மாலைப்பொழுது தெரிகின்றதாம்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது (1221)

நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 174

காதல்....

ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்.அப்படியில்லாமல்..ஒரு தலைக்காதல் என்பது எது போலவாம்...தெரியுமா?

காவடி எடுப்பவர்களின் , காவடித் தண்டில் இரண்டு பக்கங்களிலும் ஒரே அளவு கனம் இருக்க வேண்டுமாம்.இல்ல்லாவிடின் சுமப்பது கடினமாய் அமையுமாம்.அதுபோலத்தான் ஒருதலைக்காதல் என்கிறார்.

ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது (1196)

காவடித் தண்டின் இரு பகக்ங்களும் ஒரே அளவு கனமாக இருப்பது போல, காதலும் ஆண்,பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்.ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை..துயரமும் உருவாகும்.

கடலைத் தூர்ப்பது என்பது எவ்வளவு இயலாத காரியம்.ஆனால் அது கூட எளிதானதாம்..பின் அதைவிட கடினமானது என்ன என்கிறார்?

அன்பில்லாதவரிடம் துன்பத்தினைச் சொல்லி ஆறுதல் பெற எண்ணுவது..

உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு (1200)

நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும் 

Saturday, August 10, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகலும் -173

தலைவி விரும்பிக் காதல் கொள்வது போல, தலைவன் அவளை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில், அவரால் தனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது என நினைப்பாளாம்

விரும்பப்படாத நிலை ஏற்படின் அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவேக் கருதப்படுவார்

நம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்பிகின்ற பேறுபெற்றவர் எதுபோன்ற வாழ்க்கைப்பலனை பெறுவார்களாம் தெரியுமா?  விதையில்லா பழத்தைப் போலவாம்

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி (1191)

தம்மால் விரும்பபப்டும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லா பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவர் ஆவர்.

Friday, August 9, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் -172

காதலர் பொருளீட்ட காதலையை விட்டுச் சென்று விட்டார்.அந்தத் தற்காலிகப் பிரிவும் காதலிக்கு பசலை நிறந்தை மேனியில் உண்டாக்கிவிடுமாம்.

அதேபோல உடலில் பசலை நிறம், காதலன் இறுகத் தழுவிய பின்னர் அவனது பிடி சற்றுத் தளர்ந்தாலும் காதலிக்கு பசலை நிறம் படர்ந்துவிடுமாம்.இது எது போல என்றால்...விளக்கின் ஒளி சற்றே குறைந்தாலும் உடனே பரவிடும் இருள் போலவாம்.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (1186)

விளக்கின் ஒளி குறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலனின்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசுமைநிறம் படர்ந்து விடுகிறது










வள்ளுவரும்..ஒப்பீடுகளும் - 171

நள்ளிரவு....கடும் வெள்ளம்..தனியாளாக அதன் கரையை கடக்கமுடியாத நபர் போல...நள்ளிரவில்..துணையின்றி தனியாய் நிற்கின்றாள்..காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தமுடியாமல் தவிக்கின்றாளாம்

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன் (1167)

நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கின்றேன்.அதனால் காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகின்றேன்

அதேபோல அடுத்த குறளில் சொல்கிறார்..

காதலர் இருக்குமிடத்திற்கு  என் நெஞ்சத்தைப் போல செல்லமுடியுமானால் (காதலின் நெஞ்சத்தில் குடியிருக்கிறாள் எனக் கொள்ளலாம்), என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய அவசியமில்லை

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண் (1170)


வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 170

காதலை கடலுடன் ஒப்பிட்டு..காதல் கடல் போல சூழ்ந்து கொண்டிருக்கிறது என்றவர்..கடலைக் கடக்க தோணி உண்டு,ஆனால் காதல் கடலைக் கடக்க பாதுகாப்பான தோணி கூட இல்லை என்கிறார்.

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல் (1164)

காதல் கடலைப் போல சூழ்ந்து கொண்டு வருத்துகிறது.ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை..

காதலையும்..கடலையும் அடுத்து வரும் குறளிலும் ஒப்பிடுகிறார்.

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது (1166)

காதல் இன்பம் கடல் போன்றது.காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ., கடலைவிடப் பெரிது

Wednesday, August 7, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 169

ஊற்று நீரானது இறைக்க இறைக்க பெருகும்.இறைக்கின்ற ஊற்றே சுரக்கும் என்பர்.அதுபோலத்தான் காதலாம்.அதனை மறைக்க  மறைக்க பெருகுமாம்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகுமே (1161)

இறைக்க இறைக்க பெருகும் ஊற்று நீர் போல ,பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்

காவடி சுமப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா.அவர்கள் சுமை இரண்டு பக்கமும்  இருக்கும்.அதுபோலவாம் காதல் நோயும்.

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து (1163)

பிரிவைத் தாங்க முடியாது உயிர் துடிக்கும் என் உடலானது,ஒருபுறம் காதல்நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகின்றது 

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 168

காதலன், காதலையை விட்டுப் பிரிகிறான்.அவனின் பிரிவினை எண்ணி எண்ணி காதலி இளைக்கிறாள்.அவளது கை மூட்டிலிருந்து வளையல்கள் கழன்று விழும் நிலை.இதையெல்லாம் பார்க்கும் ஊரார் தூற்றும் நிலை ஏற்படுகிறதாம்.

அதுவாவது பரவாயில்லை..

ஒருவரை ஒருவர் காணாமலும், தொடாமலும் பிரிந்திருக்கும் போது உண்டாகும் காதல் நோய்.உடலையும் ,உள்ளத்தையும் சுடுகின்றதாம்.ஆனால் இந்த சூடு என்பது நெருப்பினால் இல்லையாம்.நெருப்பு தொட்டால் தான் சுடுமாம்.இவர்கள்  நெருப்பு பிரிவில் சுடுகின்றதாம்.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ  (1159)

ஒருவரை ஒருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும், உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை.நெருப்பு தொட்டால் சுடும்.இது பிரிவில் சுடுகின்றதே!

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 167

எரியும் நெருப்பில் நெய்யினை ஊற்றினால் என்னவாகும்?
அந்நெருப்பு மேன்மேலும் கொழுந்துவிட்டு எரியும்.அதுபோல ஊராரின் பழிச்சொல்லால் காதல் உணர்வை அடக்கிடலாம் என எண்ணுவது, அக்காதல் வளரவே உதவும்

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல் (1148)

ஊரார் பழிசொல்லிற்கு பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது எரிகின்ற தீயை நெய்யினை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்


வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 166


சந்திர கிரகணம் என்பதை சந்திரனை பாம்பு விழுங்குவதாக படிக்காத, மூடநம்பிக்கை உள்ளவர்கள் கூறுவர்.

அதுபோல காதலரை சந்தித்தது ஒரு நாள் என்றாலும், அந்நிகழ்வு பல நாட்களாக நடக்கும் நிகழ்வாக ஊர் முழுவதும் பரப்பப்படுமாம்

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று (1146)

காதலரை சந்தித்துக் கொண்டது ஒருநாள் என்றாலும் சந்திரனை பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் கிரகணம் எனும் நிகழ்வினைப்போல, அந்தச் சந்திப்பு ஊர்முழுதும் அலராகப் பரவியது

ஒருவரை ஒருவர் விரும்பி மலரும் காதலுக்கு ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்கள் எருவாகவும்,காதலரின் அன்னைமாரின் கடுஞ்சொற்கள் நீராகவும் ஆகி அக்காதல் எனும் பயிர் வளரவே பயன்படுமாம்

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய் 91147)

ஒருவரை ஒருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே அன்றி கருகிப் போய்விடாது

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 165

மலர்விழியாளுக்கு  காதலின் மாண்பினை உணராமல் ஊரார் பழித்துரைத்தால் அதுவே மறைமுக உதவியாய் இருக்குமாம்.

ஊரார் தூற்றுவதால் காதல் வளருகிறதாம்.இல்லையேல் காதல்கொடி வளமிழந்து வாடிவிடுமாம்.

கள் உண்பவன் சிறிது நாளில் கள்ளினையே விரும்பி அதை உண்பதை விடமுடியாதது போன்றதாம் காதல்.அது வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருக்குமாம்

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது (1145)

காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளினையே விரும்புவது போன்றதாகும் 

Monday, August 5, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 164

வெள்ளம்..பெரு வெள்ளம்..அப்போது அதில் மாட்டிக் கொள்ளும் தோணிகள் அடித்துச் செல்லப்படும்.அந்த அளவு வலிமையை கொண்டது வெள்ளம்.

அதுபோல காதல் எனப்படும் பெருவெள்ளம், ஆண்மையை அடித்துச் சென்றுவிடுமாம்

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மைஎன்னும் புணை (1134)

காதல் பெருவெள்ளமானது நாணம்,நல்ல ஆண்மை எனப்ப்டும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது

கீழே சொல்லியுள்ள குறளில் காதலை கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பிடுகிறார்

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில் (1137)

கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும் கூடப்  பொறுத்துக் கொண்டு மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை

(மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை)

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 163

நான் விரும்பும் பாவைக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக...என் கண்ணில் கருமணியில் உள்ள பாவையே ! அவளுக்கு இடமளித்து நீ விலகி விடு என்பவர் சொல்கிறார்..

அவள் என்னோடு கூடும் போது.. (எப்படியிருக்கிறதாம் தெரியுமா?) உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னை விட்டு நீங்கும் போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகின்றேன்

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து (1124)

அவள் என்ன சொல்கிறாள் தெரியுமா?

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து (1127)

(அவளது) காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கின்ற காரணத்தினால், (கண்ணுக்கு) மை தீட்டினால் ..எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்

Sunday, August 4, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 162

மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேற்பாடு தெரியாமல் விண்மீன்கள் தவிக்கின்றனவாம்.
மேலும் வள்ளுவரின் வர்ணனைகள் சில..

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிவழங்கும் நிலவில் உள்ள சிறு களங்கம் கூட, மங்கை முகத்தில் இல்லையாம்

மலரைப் போன்ற கண்களையுடைய காதல் மங்கையின் முகம் போல நிலவு இருப்பதாக நிலவு பெருமைப் பட வேண்டுமெனில், பலரும் அறிய தோன்றாமல் இருக்க வேண்டுமாம்(பலர் அறிய தோன்றினால்..அவர்கள் காதல் மங்கையின் முகம் நிலவை விட அழகு என்று சொல்லிவிடுவார்களாம்)

அனிச்ச மலர் மென்மையானது.அதுபோல அன்னத்தின் இறகு மென்மையானது..இவையிரண்டும் என் காதலியின் காலடிகள் பட்டால் அவை அவளுக்கு நெருஞ்சி முள் தைத்தாற்போல துன்பத்தை விளைவிக்குமாம்.அந்த அளவு மென்மையானதாம் அவள் பாதங்கள்

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120)


வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 161

பெண்ணின் இடையைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை எனலாம்.

அப்படியிருக்கையில்... திருக்குறளில் இல்லாதது ஏதுமில்லை என்றுள்ள போது..வள்ளுவர் மட்டும் இடையை விட்டு வைப்பாரா.

சாதாரணமாக இடையை,கொடியிடை என கொடிக்கு ஒப்பிடுவார்கள்.ஆனால் அந்த மென்மையான கொடியினைவிட மென்மையான ஒன்றை ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

அனிச்ச மலர் பற்றி ஏற்கனவே தனது குறளில் சொன்னவர்..மீண்டும் அனிச்ச மலரை விடவில்லை.அந்த மலரே மென்மையானது எனில் அம்மலரின் காம்பு எப்படியிருக்கும்..அந்த அளவு மென்மையைக் கூட தாங்காதாம் அந்த இடை.அம்மலரை காம்புடன் சூடிக் கொண்டதால் அந்த பாரம் தாங்காது இடை ஒடிந்து விழுந்துவிட்டாளாம்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை (1115)

என்கிறார்.

அவளுக்காக நல்ல பறை ஒலிக்கவில்லை.ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்.காரணம்...அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.

Saturday, August 3, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 160

அனிச்ச மலர் மென்மையானது மோப்பக் குழயும் என்றுள்ளார் ஒரு குறளில்.அந்த மென்மையான மலரைவிட மென்மையானவள் என் காதலி என்பவர்

அடுத்தடுத்த் குறள்களில் பெண்ணை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்.

அவளது..மலரே கண்டு வியக்கும் மலராம்
முத்துப்பல் வரிசை
மூங்கிலனைய தோள்
மாந்தளிர் மேனி மயக்கமூட்டும் நறு மணம்
மையெழுதிய வேல்விழி
குவளை மலர்கள் கண்டால்"நாம் இவள் கண்களுக்கு ஒப்பாகவில்லையே" எனத் தலை குனிந்து நிலம் நோக்குமாம்

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114)

(என் காதலியைக்) கண்டால் குவளைமலர்கள் "இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடையவில்லையே:"எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 159

காதலர்க்கு மிக இனிமை தருவது காற்றுகூட இடையில் நுழைய முடியா அளவிற்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

காதல் மனையைத் தழுவதற்கு ஒப்பானது ஒன்றுண்டாம்.அது என்ன தெரியுமா? தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து உண்டு களிப்பதாம்.

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு (1107)

தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும், பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும்  இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் த்ழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது

தவிர..

அவளின் அழகிய தோள்கள் அமிழ்தம் என்றும்,மேனியை மாம்பழ மேனி என்றும் சில குறள்களில் பெண்ணை ஒப்பிட்டுள்ளார்