1.பிறர்க்கு ஈதலும்,புகழுமே வாழ்வில் ஆக்கம் தரும்
2.இல்லாதவர்க்கு வழங்குபவரின் புகழே போற்றப்படும் புகழாகும்.
3.ஒப்பற்றதும்,அழிவில்லாததும் இந்த உலகில் புகழ் ஒன்றே ஆகும்.
4.தன்னலமின்றி புகழ் ஈட்டிய மக்களை ஏழேழு உலகும் பாராட்டும்.
5.துன்பம்,சாவு.. இவற்றிலும் கூட புகழ் பெறுவார் ஆற்றலுடையவர்.
6.எத்துறையில் ஈடுபட்டாலும் புகழோடு விளங்க வேண்டும்.அல்லாதார் அத்துறையில் ஈடுபடவே கூடாது.
7.புகழுடன் வாழ முடியாதார் ..தம் செயல்களை இகழ்பவரை நொந்துக்கொள்ளாமல் தன்னைத்தானே நொந்துக்கொள்ள வேண்டும்.
8.தமக்குப்பிறகு எஞ்சி நிற்கக்கூடிய புகழை பெறாதார், வாழ்ந்தும் பயன் இல்லை.
9.மனித உடலில் உயிர் எனப்படுவது புகழ் ஆகும்.அது இல்லாதார் இந்த பூமியில் தரிசு நிலமே ஆவர்.
10.பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை.அதுபோல புகழுடன் வாழ்வதே வாழ்க்கை.
3 comments:
புகழ் அதிகமானால்
மனித ஜீவீயத்திற்க்கு
நல்லது அல்ல
புகழ்க்கு தான் மனிதன் மடிகிறான்
நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் புகழ் இரண்டு வகைப்படும்.
1.தானே நம்மைத்தேடி வருவது.இது நம் நற்செய்கைகள் மூலம் உ.ம்.காமராஜ்,ஜீவா,கக்கன் முதலானோர்
2.நாம் புகழைத்தேடிப் போவது.இன்று நம்மிடையே பலர் இப்படி இருக்கின்றனர்.சிலர் பணம் கொடுத்தும் இதை
அடைய முடியுமா? என்று பார்ப்பார்கள்.வள்ளுவர் சொன்ன புகழ்...முதல் பிரிவினருடைய புகழ்.
Post a Comment