மூன்று உறுதிப் பொருள்களான அறம்,பொருள்,இன்பம் இவற்றை ஊன்றுகோலாக க் கொள்ளும் மனிதன்..பரம் பொருளான அன்பினைப் பெரும்பேறு பெறுவான்.
அறமுறைக் காத்து,பொருள் வரவு ஏற்று,இன்பநெறி அனுபவிக்க வேண்டும் என்பதால்தான் அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என முப்பால் அருளினார்.
வள்ளுவன் தன் முதல் குறளை தமிழ் முதல் எழுத்தான 'அ' கரத்தில் தொடங்கி(அகர முதல எழுத்தெல்லாம்) கடைசி குறளை(1330) தமிழ் கடைசி எழுத்தான "ன" கரத்தில் முடித்தான்.(ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி
முயங்கப் பெரின்)
வள்ளுவன் பதிவில் 50 அதிகாரங்களுக்கு நேரடி அர்த்தங்களாய் இல்லாவிடினும் அவன் சொல்ல வந்ததை சுருக்கி
சொல்லி இருக்கிறேன்.இது சம்பந்தமாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பியவர்கள்,தொலைபேசியவர்கள் மற்றும்
பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி.
உங்கள் ஆதரவு மீதி குறட்பாக்களுக்கும் தொடரட்டும்.
No comments:
Post a Comment