Sunday, June 1, 2008

உங்கள் கருத்து அறிய ஆவல்

வள்ளுவன் சொன்னதை..என்னால் முடிந்த அளவுக்கு சுருக்கி
அவனின் பொன்மொழிகளாகக் கொடுத்தேன்.
இத்துடன் அறத்துப்பாலும்,பொருட்பாலும் முடிவடைந்து விட்டன.
கடைசி 25 அதிகாரங்கள் இன்பத்துப்பால்.
அறவழியில் நடந்தால் பொருள் தேடி வரும்.அறமும்,பொருளும்
இருப்பவரை இன்பம் தேடிவரும்.
ஆகவே..இன்பத்துப்பால் பற்றி பதிவு வேண்டுமா? என்று எண்ணம்.
இது பற்றி உங்கள் எண்ணம் அறிய ஆவல்.
நீங்கள் எழுதச் சொன்னால் எழுதுகிறேன்.
இந்த பதிவுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
TVR

4 comments:

Ranganathan. R said...

நிச்சயம் எழுதுங்கள்... Please...

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

u r giving meanings very fast. please include the original kurals too when u explain.

T.V.ராதாகிருஷ்ணன் said...

திரு.ரங்கனாதன்,திரு ரவிஷங்கர் வணக்கம்.
பதிவுக்கு வருகை புரிந்தமைக்கு நன்றி.
இந்த பதிவின் நோக்கம்..நான் ஏற்கனவே ஆரம்பத்தில் சொன்னபடி...
ஒவ்வொரு குறளின் நேரடியான அர்த்தம் இல்லை என் பதிவு.
நீங்கள் சொல்வது போல..குறள் எழுதி அர்த்தத்தயும் எழுதினால் விரிவாக எழுத வேண்டும்.ஒவ்வொரு சொல்லின் அர்த்தமும் முக்கியம்.
மேலும் இது விரைவு உலகம்..ஒவ்வொருவருக்கும் வள்ளுவன் என்ன சொல்கிறார்
என்று தெரிந்தால் போதும்.அதற்கான குறளையும் படித்து அர்த்தத்தையும் தெரிந்துக்
கொள்ள நேரம் கிடையாது.
அதனால்தான் நானும் வள்ளுவனின் பொன்மொழிகள் என்றே பதிவை சொல்கிறேன்.
ரங்கனாதன் சார், இன்பத்துப்பாலில் பொன்மொழிகள் என்று சொல்லும்படி ஏதும் இல்லை.
அதனால்..அது தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.
TVR

கோவை விஜய் said...

தொடர்ந்து எழுதவும்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/