Tuesday, July 29, 2008

2. வான் சிற்ப்பு

1.மழை தான் உலகத்தை வாழ வைக்கும் அமிர்தம்.

2.உணவுப்பொருட்கள் விளைய மழை தேவை...தவிர...மழையே அருந்தும் உணவாகும் உள்ளது.

3.எங்கும் கடல் நீர் சூழ்ந்திருந்தாலும் மழை இல்லை எனின் பசி வாட்டி வதைக்கும்.

4.மழை இல்லையேல் உழவுத்தொழிலும் இல்லை.

5.மழை பெய்யாம்மல் வாழ்வையும் கெடுக்கும்...பெய்து வாழ்வின் வள்த்தையும் சேர்க்கும்.

6.மழை இல்லையேல் மண்ணில் புல்லைக்கூட பார்க்கமுடியாது.

7.கடல்நீர் மேகமாக மீண்டும் கடலில் பெய்வதால் கடல் வற்றுவதில்லை.அதுபோல மனிதனும் சமுதாயத்துக்கு
பயன்பட்டால்தான் சமுதாயம் வாழும்.

8.மழை பொய்த்துவிடடால் இறைவனுக்கு விழாக்க்ளும் கிடையாது...வழிபாடும் இருக்காது.

9.மழை பெய்யாவிடின்..செய்யும் தானம்....மேற்கொள்ளும் நோன்பு ஆகியவை இருக்காது.

10.உலகில் மழை இல்லை எனில் ஒழுக்கமே கேள்விக்குறியாகும்...

மழையின் முக்கியத்தை இதைவிட அருமையாக யாரால் சொல்லமுடியும்.
வாழ்க வள்ளுவம்

6 comments:

Anonymous said...

Your effort is appreciable, but would be better, if you can post the actual kural along with the short explanation.

கோவை விஜய் said...

மண்னணின் மழைத்துளி
மனிதனின் உயிர்த்துளி

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை "

இந்த குறளை மனப்பாடம் செய்வதற்கு தான் நான் சிறு வயதில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆனந்த்..நீங்கள் சொல்வது போல் செய்யலாம்..ஆனால் அப்படி செய்யும்போது..வள்ளுவனின் சில சொற்களுக்கு அர்த்தம் விடுபட்டு போய் விடும்.மேலும் என் நோக்கம்..ஒவ்வொரு பேரறிஞர்களும் சொல்லியுள்ளதாக வரும் பொன்மொழிகள் போல் வள்ளுவனின் 1330 குறளும் பொன்மொழிகளாய் போற்றப்பட வேண்டும் என்பதே..நீங்கள் சொல்வதுபோல் செய்தால் அது மற்றுமொரு உரையாக ஆகிவிடும் வாய்ப்பு உண்டாகி விடும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெகு அழகாக சொல்லி உள்ளீர்கள்.வருகைக்கு நன்றி விஜய்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பசு மரத்தாணி போல அன்று கஷ்டப்பட்டு பதியவைத்தது இன்று எவ்வளவு நன்றாக ஞாபகத்தில் உள்ளது பாருங்கள் aruvai baaskar.