Wednesday, October 1, 2008

26.புலால் மறுத்தல்

1.தன் உடல் வளர வேறு உயிரின் உடலை உண்பவனிடம் கருணை உள்ளம் இருக்குமா.?

2.புலால் உண்பவர்களை அருள் உடையவர்களகக் கருதமுடியாது.

3.படைக்கருவியை உபயோகிப்பவர் நெஞ்சமும்,ஒரு உயிரின் உடலை
உண்பவர் நெஞ்சமும் அருளுடமை அல்ல.

4.கொல்லாமை என்பது அருளுடமை....கொல்லுதல் அருளற்ற செயல்...
ஊன் உண்ணுதல் அறம் இல்லை.

5.உயிர்களை சுவைக்காதவர்கள் இருப்பதால் தான் பல உயிர்கள்
கொல்லப்படாமல் வாழ்கின்றன.

6.உண்பதற்காக உயிர்களை கொல்லாதிருப்பின்..புலால் விற்கும் தொழிலை
யாரும் மேற்கொள்ளமாட்டார்கள்.

7.ஊன் ஒரு உயிரின் உடற்புண் என்பதால் அதை உண்ணாமல் இருக்கவேண்டும்.

8.மாசற்ற மதி உள்ளோர் ..ஒரு உயிரை அழித்து அதன் ஊனை உண்ணமாட்டார்கள்.

9.நெய் போன்றவற்றை தீயிலிட்டு நல்லது நடக்க யாகம் செய்வதை விட ஒரு உயிரை
போக்காமலிருப்பது நல்லது.

10.புலால் உண்ணாதவரையும்,அதற்காக உயிர்களை கொல்லாதவர்களையும்
எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.

15 comments:

SP.VR. SUBBIAH said...

அருமை! நண்பரே!

விலங்குகள் ஒன்றை ஒன்று அடித்துத் தின்கிறது என்றால் - அவைகள் அப்படியே தின்கின்றன.
மனிதன் மட்டும் சமைத்து உன்கிறான்.சமைக்காமல் தின்று பார்க்கட்டுமே!

விலங்குகளுக்கு இரண்டு செயல்கள் மட்டுமே
1. அவைகள் தங்களுக்கு இரை தேட வேண்டும்
2. அதே நேரத்தில் மற்ற விலங்குகளுக்கு இரையாகி விடாமல் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்!

மனிதனின் நிலை அப்படியா?
தானியங்கள், காய்கறிகள், கிழங்குகள், பழங்கள் என்று இறைவன் கொள்ளையாக எத்தனை கொடுத்துள்ளான்.
அதைவிடுத்து, கோழியையும், ஆட்டையும், மாட்டையும் எதற்காக அடித்து, சமைத்து ருசிக்க வேண்டும்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆசிரியர் ஐயா அவர்களே..வருகை புரிந்தமைக்கு நன்றி..
எதெற்கெடுத்தாலும் வள்ளுவனை பேசுபவர்களும்..இந்த விஷயத்தில் அவர் சொன்னதை கடைபிடிக்க மறுக்கிறார்களே!!

Subbiah Veerappan said...

/////T.V.Radhakrishnan said...
ஆசிரியர் ஐயா அவர்களே..வருகை புரிந்தமைக்கு நன்றி..
எதெற்கெடுத்தாலும் வள்ளுவனை பேசுபவர்களும்..இந்த விஷயத்தில் அவர் சொன்னதை கடைபிடிக்க மறுக்கிறார்களே!!////

தங்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டும் வள்ளுவரிடமிருந்து உருவிக்கொள்வார்கள்.
அவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள். அவர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை நண்பரே!

நசரேயன் said...

மக்கள் மக்களையே அடித்து கொல்லும் போது மாக்களை மட்டும் விட்டு வைப்பார்களா?

suvanappiriyan said...

புலால் உண்ணாமை என்பது மிகப் பெரும் உயர்ந்த தத்துவமாக பலராலும் பார்க்கப்படுகிறது. எந்த ஒரு தத்துவமும் உலக மக்கள் அனைவராலும் பின் பற்றக் கூடியதாக இருக்க வேண்டும். வட துருவத்தில் வாழும் எஸ்கிமோக்களிடம் புலால் உண்ணாமையை கடைபிடிக்க சொன்னால் முடிவில் அவர்கள் உணவு கிடைக்காமல் இறக்க வேண்டி வரும்.

எல்லோரும் காய்கறிக்கு மாறிவிட்டால் காய்கறிகளின் விலை இன்னும் விண்ணை முட்டும்.

காய்கறிகளுக்கு மட்டும் உயிர் இல்லையா? அவைகளும் ஒரு உயிர்தானே!

புலால் உணவுகளான ஆடு மாடு கோழி மீன் போன்ற உயிர்கள் உலகில் குறைவதாக காணோம். மனிதன் சாப்பிடாத புலி சிங்கம் சிறுத்தை போன்ற உயிரனங்களே உலகில் அரிதாக குறைந்து வருகின்றன. புலால் உண்ணுவதை விட்டுவிட்டால் ஆடு மாடு கோழி மீன் போன்றவை உலகில் அதிகரித்து மனிதனுக்கு மிகப் பெரும் சவாலாகி விடும். கங்காரு அதிகரித்ததால் ஆஸ்திரேலியாவில் அந்த இனத்தையே தோட்டாக்களால் துளைக்கிறார்கள். அந்த நிலைதான் ஆடு மாடு கோழி மீன் போன்ற உயிரினங்களுக்கும் ஏற்படும்.

எனவே புலால் உண்பவர்களை அவர்கள் வழியிலேயே விட்டு விடுவோமே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
மக்கள் மக்களையே அடித்து கொல்லும் போது மாக்களை மட்டும் விட்டு வைப்பார்களா?//

வருகைக்கு நன்றி நசரேயன்.,ஆமாம் ..நீங்கதானே கோழி பிரியாணி கேட்டது?

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவனப்பிரியன்..நீங்கள் தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள்.வள்ளுவர் சொன்னதைத்தான் நான் எழுதியிருக்கிறேன்.,அது விவாதமாக மாறிவிடக்கூடாது.முதல்முறையாக வருகை புரிந்தமைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்.

நசரேயன் said...

/*

//நசரேயன் said...
மக்கள் மக்களையே அடித்து கொல்லும் போது மாக்களை மட்டும் விட்டு வைப்பார்களா?//

வருகைக்கு நன்றி நசரேயன்.,ஆமாம் ..நீங்கதானே கோழி பிரியாணி கேட்டது?

*/
காய்கறி பிரியாணியா மாத்திக்கிறேன் :)

கோவி.கண்ணன் said...

//வட துருவத்தில் வாழும் எஸ்கிமோக்களிடம் புலால் உண்ணாமையை கடைபிடிக்க சொன்னால் முடிவில் அவர்கள் உணவு கிடைக்காமல் இறக்க வேண்டி வரும்.
//

வடதுருவம் வரையில் திருக்குறள் பரவும் போது நீங்கள் சொல்வதை கவனத்தில் கொள்ளலாம். :) காய்கறி உணவு எட்டும் தொலைவில் இருப்பவர்கள் கடைபிடிக்கலாமே !

அரேபிய கடல் முழுவதையும் சல்லடையாக்கி சலித்துவிட்டதால் தற்பொழுது அரேபிய நாடுகள் மீன்வளத்திற்காக ஆப்ரிக்க கடல் பகுதியை நாடுகிறார்கள்.

ஒன்றை ஒன்று அடித்து தின்பது உணவு சுழற்சி என்று கூட சொல்லாம். அந்த உணவு சுழற்சிக்குள் மனிதன் தன்னை ஒப்படைக்கிறானா ? என்றும் கேட்டுக் கொண்டால், புலால் உண்ணும் ஞாயத்திற்கு, உணவு சுழற்சியை யாரும் காரணம் காட்ட தயங்குவார்கள்.

உங்கள் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் விலங்குகளை வெட்டும் போது சகட்டு மேனிக்கு வெட்டுங்கள் என்று இஸ்லாம் கூட சொல்லவில்லை, உணவுக்காக வெட்டினால் இறைவன் பெயரில் வெட்டுங்கள் என்று தானே சொல்லி இருக்கிறது. கொல்வது பாவம் என்ற கருத்து இருப்பதால் தானே 'கொல்வதற்கு முன் பிரார்த்தனை செய்ய இஸ்லாமும் சொல்லி இருக்கிறது?'

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..அருமையான கருத்துகளை தெரிவித்தமைக்கும் நன்றி..கோவி

கோவி.கண்ணன் said...

//எந்த ஒரு தத்துவமும் உலக மக்கள் அனைவராலும் பின் பற்றக் கூடியதாக இருக்க வேண்டும். வட துருவத்தில் வாழும் எஸ்கிமோக்களிடம் புலால் உண்ணாமையை கடைபிடிக்க சொன்னால் முடிவில் அவர்கள் உணவு கிடைக்காமல் இறக்க வேண்டி வரும்.
//

சுவனபிரியன்,

சீனர்கள் பன்றி இறைச்சி இல்லை என்றால் இறந்துவிடுவார்கள். கொரியர்கள் நாய்கறி இல்லை என்றால் இறந்துவிடுவார்கள். இஸ்லாம் கொள்கைபடி நீங்கள் அவர்களிடம் பன்றி அசுத்தமானது, நாய் கறி உண்ணுவதற்கு உகந்தது அல்ல என்று சொன்னால் உணவு கிடைக்காமல் அவர்கள் எல்லோருமே இறந்துவிடுவார்கள்.

எந்த ஒரு கொள்கையும் ஏற்பவர்களுக்கும், பின்பற்றக் கூடியவர்களுக்கு மட்டுமே அன்றி உலகம் முழுவதற்கும் அல்ல.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
எந்த ஒரு கொள்கையும் ஏற்பவர்களுக்கும், பின்பற்றக் கூடியவர்களுக்கு மட்டுமே அன்றி உலகம் முழுவதற்கும் அல்ல.//

:-))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SP.VR. SUBBIAH said...
தங்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டும் வள்ளுவரிடமிருந்து உருவிக்கொள்வார்கள்.
அவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள். அவர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை நண்பரே!//
:-))))))

Anonymous said...

நல்ல முயற்சி தொடருங்கள்

http://arivhedeivam.blogspot.com/

T.V.ராதாகிருஷ்ணன் said...

//sivasubramanian.d said...
நல்ல முயற்சி தொடருங்கள்//

வருகைக்கு நன்றி சிவசுப்ரமனியம்..மீண்டும் வாருங்கள்