Sunday, August 30, 2009

93.கள்ளுண்ணாமை

1.மதுப்பழக்கம் கொண்டவர் தமது புகழை இழப்பதோடு மற்றவர்களாலும்
அஞ்சப்படாதவர்களாக ஆவார்கள்.

2.சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் தான் மது அருந்துவர்.

3.மது அருந்தி மயங்கிக் கிடப்பவனை..பெற்றதாயே மன்னிக்கமாட்டாள் என்னும்போது..
ஏனையொர் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?.

4.மது மயக்கமெனும் பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருப்போன் முன்
நாணம் எனப்படும் பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

5.தன்னை மறந்து மயங்கி இருக்க..விலைகொடுத்து கள்ளை வாங்குதல் என்பது மூடத்தனமாகும்.

6.இறப்பு என்பது நீண்ட உறக்கம் என்பது போல..கள்ளுண்பவர்களும் அறிவுமயங்குவதால்
அவர்கள் மதுவுக்கு பதில் நஞ்சு உண்பவர்கள் என்று கூறலாம்.

7.மறைந்திருந்து மது அருந்தினாலும்..அவர்கள் கண்கள் மயக்கத்தைக் காட்டிக்
கொடுப்பதால் ஊரார் அவர்களை எள்ளி நகையாடுவர்.

8.மது அருந்தமாட்டேன் என ஒருவன் பொய் சொல்ல முடியாது..ஏனெனில் மது
மயக்கத்தில் உள்ளபோது உண்மை வெளிப்பட்டுவிடும்.

9.குடிபோதைக்கு ஆளாளவனை திருத்த முயல்வது என்பது..நீரில் மூழ்கிய ஒருவனை
தீப்பந்தம் எடுத்துச் சென்று தேடுவது போல ஆகும்.

10.ஒருவன் மது அருந்தாதபோது.. மது அருந்தியவனின் நிலையை பார்த்தப் பின்னாவது
..திருந்தமாட்டானா?

4 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

இதைக் கொன்சம் அந்த வாளும் வள்ளுவருக்கு அனுப்புங்க ராதாகிருஷ்ணன். உங்களுக்கு புண்ணியமாப் போகட்டும்.
அன்புடன்
ஆரூரன்

Tamil Home Recipes said...

மிக்க நன்று

தாராபுரத்தான் said...

பாஸ் மார்க்

கோவி.கண்ணன் said...

டாஸ்மாக்...மதுபாட்டில்களில் வகைக்கு ஒன்றாக பத்துக் குறள்களை எழுதி வைக்கலாம், அதைவிட்டு மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு...என்பது கண் துடைப்பு. விற்காவிட்டால் நாட்டுக்கு கேடு என்றால் வருமானம் நின்னுபோகனுமே...விற்கிறதே அரசு...அது எப்படி நாட்டுக்கு கேடாகுமோ !