Sunday, December 20, 2009

98.பெருமை

1.ஊக்கம் ஒருவரது வாழ்க்கைக்கு ஒளி தருவதாகும்..ஊக்கமின்றி வாழ்வது இழிவே தரும்.

2.பிறப்பினால் அனைவரும் சமம்..தொழில் செய்யும் திறமையால் மட்டுமே வேறுபாடு காணமுடியும்.

3.பண்பு இல்லாதவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் உயர்ந்தவர் ஆகமாட்டார்கள்..இழிவான காரியத்தில்
ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தலும் உயர்ந்தாரே ஆவார்கள்.

4.ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொண்டு நடந்தால்..கற்புக்கரசிகளுக்கு கிடைக்கும் புகழும் ,பெருமையும்
இவர்களுக்கும் கிடைக்கும்.

5.அரிய செயல்களை செய்து முடிக்கும் திறமைசாலிகள் அனைவரும் பெருமைக்குரியவர்களே.

6.பெரியாரை விரும்பி ஏற்றுக்கொள்ளும் நோக்கம்..சிறியோரின் உணர்ச்சியில் இருக்காது.

7.சிறப்பு நிலை..பொருந்தாத கீழ்மக்களுக்குக் கிடைத்தால்..அவர்கள் வரம்பு மீறி செயல்படுவர்.

8.பண்புடைய பெரியார் எக்காலமும்..எல்லோரிடமும் பணிவுடன் நடப்பார்கள்.ஆனால் சிறியோரோ
பண்பு இன்றி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு இருப்பார்கள்.

9.ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை ஆகும்.ஆணவத்தின் எல்லைக்கு செல்வது சிறுமை ஆகும்.

10.பிறர் குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும்..பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது
சிறுமைக் குணமாகும்.

4 comments:

வால்பையன் said...

//ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொண்டு நடந்தால்..கற்புக்கரசிகளுக்கு கிடைக்கும் புகழும் ,பெருமையும்
இவர்களுக்கும் கிடைக்கும்.//

கற்புகரசின்னா என்னாங்க!?

தேவன் said...

அருமை ஐயா? தொடருங்கள் ....

vidivelli said...

very nice.........

கமலேஷ் said...

அருமை...

தொடருங்கள்....