Sunday, March 30, 2008

15.பிறனில் விழையாமை

1.அறநூல்,பொருள் நூல்களை உணர்ந்தவர்கள் பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்ளமாட்டார்கள்.

2.பிறன் மனைவியை அடைய நினைப்பவர்கள் மிகவும் கீழானவர்களாவர்.

3.பிறர் மனைவியிடம் தகாதமுறையில் நடப்பவன்..உயிர் இருந்தும் பிணத்துக்கு ஒப்பாவான்.

4.தப்பு செய்யும் எண்ணத்துடன் பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது எப்பேர்ப்பட்டவனையும்
மதிப்பிழக்கச் செய்துவிடும்.

5.பிறன் மனைவியை எளிதாக அடையலாம் என முறைகேடான செயலில் ஈடுபடுபவன் அழியா பழியை அடைவான்.

6.பிறன் மனைவியை விரும்புவனிடமிருிந்து பகை,தீமை,அச்சம்,பழி இந்நான்கும் நீங்காது.

7.பிறன் மனைவியிடம் இன்பத்தை நாடி செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை
மேற்கொண்டவனாவான்.

8.காம எண்ணத்துடன்... பிறன் மனைவியை அணுகாதவனின் குணம் அவனை ஒழுக்கத்தின் சிகரமாக
ஆக்கும்.

9.பிறன் மனைவியைத் தீண்டாதவனே உலகின் பெருமைகளை அடைய தகுதியானவன்.

10.பிறன் மனைவியை விரும்புவது... அறவழியில் நடக்காதவர் செயலை விடத் தீமையானதாகும்.

2 comments:

Santhosh said...

நல்ல முயற்சி அய்யா,
உங்க பதிவை www.thamizmanam.com இல் இணைத்தால் மேலும் பலர் படித்து பயன் பெறுவார்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நீங்கள் சொல்வது போல தமிழ்மணத்தில் போடலாம்.ஆனால் அது இப்பொழுது மீன் கடை போல் உள்ளது.
பூவிற்கும் மீன் வாசனை வந்துவிடக்கூடாது அல்லவா?
தங்களது வருகைக்கு நன்றி.