1.ஆக்கத்திற்கான நிலை சோர்வை நீக்கி ஊக்கம் தரும்.சோம்பல் அழிவைத்தரும்.
2.பொருளை இழக்க வைக்கும் ஊழ் அறியாமை ஆகும்.பொருளை ஆக்கும் ஊழ் அறிவுடமை ஆகும்.
3.ஒருவன் பல நூல்களைப் படித்திருந்தாலும்,இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
4.ஒருவர் செல்வமுடையவராகவும்,ஒருவர் அறிவுடையராகவும் இருப்பது உலகின் இயற்கை நிலை ஆகும்.
5.நல்ல செயல்கள் தீமையில் முடிவதும்,தீய செயல்கள் நல்லவை ஆவதுமே ஊழ் எனப்படும்.
6.தமக்கு உரியவை இல்லா பொருள்கள் நில்லாமலும் போகும்.உரிய பொருள்கள் எங்கிருந்தாலும் வந்தும் சேரும்.
7.முறையானபடி வாழவில்லை எனில்..கோடி கணக்கில் பொருள் சேர்த்தாலும் அதன் பலனை அனுபவிக்க முடியாது.
8.வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் இருக்குமேயானால் நுகரும் பொருளற்றோர் துறவி ஆவர்.
9.நன்மை தீமை இரண்டும் இயற்கை நியதி.நன்மையைக் கண்டு மகிழ்வது போல் தீமையைக் கண்டால் கலங்கக்கூடாது.
10ஊழ்வினையிலிருந்து தப்ப முயன்றாலும் அதைவிட வலிமையுள்ளது வேறு ஏதுமில்லை.
(அறத்துப்பால் நிறைவு பெற்றது)
2 comments:
/////10.ஊழ்வினையிலிருந்து தப்ப முயன்றாலும் அதைவிட வலிமையுள்ளது வேறு ஏதுமில்லை.////
விதியை மாற்ற முடியாது. மாற்ற முயன்றலும் அது வந்து அங்கு முன்நிற்கும் (Nothing is stronger than destiny) என்னும் பொருள் படக்கூறப்பட்டுள்ள இந்த வரிகளே முத்தாய்ப்பான வரிகளாகும்
வருகைக்கு நன்றி ஆசிரியர் ஐயா..
Post a Comment