1.எல்லம் இருந்தும் மனதில் உறுதி இல்லையெனில் ...செய்யும்
செயலிலும் உறுதி இருக்காது.
2.இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்குவது...மீறிவந்தால்
மனம் தளராது இருப்பது..இவையே அறிவுடையோர் கொள்கையாகும்.
3.ஒரு செயலை செய்தபின் வெளியிடுவதே ஆண்மையாகும்..இடையில்
வெளியிட்டால் அது நீங்கா துன்பத்தையே கொடுக்கும்.
4.ஒருசெயலை சொல்லுவது எல்லோருக்கும் எளிது...சொல்லியதைச்
செய்து முடிப்பது கடினம்.
5.செயல் திறனால் சிறப்புற்றவரின் வினைதிட்பம்..ஆட்சியாளரையும்
கவர்ந்து பெரிதும் போற்றப்படும்.
6.எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதியாய் இருப்பவரே..
எண்ணியபடி வெற்றி பெறுவார்கள்
7.உருவத்தில் சிறியவர்களைக் கண்டு இகழக்கூடாது.பெரிய தேர் ஓட உதவும்
அச்சாணியும் உருவத்தில் சிறியது தான்.
8.மனம் கலங்காது..ஆராய்ந்து துணிந்து,தளர்ச்சியின்றி ...தாமதமும் இல்லாமல்
ஏற்ற செயலை செய்து முடிக்கவேண்டும்.
9.இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும்போது ...அதனால் ஆரம்பத்தில்
துன்பம் வந்த போதும் துணிவுடன் செய்து முடிக்கவேண்டும்.
10.எவ்வளவு தான் உறுதி உடையவராய் இருந்தாலும் ..செய்யும் தொழிலில்
உறுதியற்றவரை உலகம் மதிக்காது
Friday, January 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. அருமையான விளக்கங்கள். அப்படியே அந்த குறளையும் பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
அன்புடன், கி.பாலு
நான் முன்னமே சொன்னபடி...இவை திருக்குறளுக்கு நேரான அர்த்தம் இல்லை.வள்ளுவர் சொல்ல வந்த கருத்துக்களை எளிமையாக சொல்லியிருக்கிறேன்.குறள் எழுதி..அர்த்தம் எழுத வேண்டும் என்றால்..அவை நேரடி அர்த்தமாய் இருக்க வேண்டும்.மேலும் பலர் அதை செய்து விட்டனர்.
வருகைக்கு நன்றி மடல்காரன்_MadalKaran
Post a Comment