Tuesday, September 30, 2014

திருக்குறள்- காமத்துப்பால்- 1099



பொது இடம்.பலர் கூடியுள்ளனர்.காதலன், காதலியும்  அந்தக் கூட்டத்தினிடையே உள்ளனர்.யாருக்கும் இவர்கள் காதலர்கள் என்று தெரியாத வகையில்..யாரோ..மூன்றாம் நபரிடம் பேசுவது போல பேசிக் கொள்ளுகிறார்கள். இப்படிப்பட்டத் திறமை காதலர்களுக்கே கைவந்த தனிக்கலை.


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

வெளியார் பார்வைக்கு அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

2 comments:

Anonymous said...

இசை வடிவில் காமத்துப் பாலின் சில பாடல்கள் தமிழிலும் (குறள், பொருட்கவிதை), ஆங்கிலத்திலும் (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு) இங்கே: http://www.reverbnation.com/panitasa/songs

http://www.amazon.com/Drop-Love-Thirukkural-Thuli-Kaamathupaal/dp/B009ER8RKK


T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், தகவலுக்கும் நன்றி