Friday, June 21, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 56

எந்தவிதமான குறையுமின்றி கற்க வேண்டியவற்றைக் கற்க வேண்டும்.

அத்துடன் மட்டுமின்றி, கற்றபடி வாழ்க்கையில் நடந்திட வேண்டும்.

இப்படிப் படிப்பதில் என்ன பயன் தெரியுமா?

ஒருவனுக்கு, படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்..

இது எதுபோல?  வள்ளுவர் சொல்கிறார்..

பூமியைத் தோண்ட தோண்ட ஊற்றுநீர் பெருகிக் கிடைப்பது போலவாம்.

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு  (396)

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். 

2 comments:

இமயவரம்பன் said...

பொருளுணரக் கருத்தளித்து தமிழுக்கு நற்றொண்டு ஆற்றுகின்றீர் !
உம் பெருந்தொண்டுக்கு இச்சிறுதொண்டனின் வாழ்த்துக்கள் - வெண்பாவிலே!

பொய்யா மொழிப்புலவர் பகர்ந்தருளும் வார்த்தைகளை
ஐயா எமக்குணர இங்களித்தீர் - வெய்யோன்
படைத்தவொளி போலிருளைப் போக்கியதே, நீர்தாம்
எடுத்துரைத்த இன்பத் தமிழ்!

https://solvelvi.blogspot.com/

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி